நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரம்ப் எடுத்த ஒரு முடிவு.. கலக்கத்தில் ஹு.. மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தலைவர்.. பரபரப்பு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் ஆதனாம் செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    WHO Chief-ஐ கண்ணீர் விட்டு அழ வைத்த Trump | Trump Defunding WHO

    உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் டிசம்பர் தொடக்கத்தில் இந்த வைரஸ் பரவ தொடங்கியது. ஆனால் அப்போது உலக சுகாதார மையம் இது தொடர்பாக பெரிய அளவில் எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை.

    இதனால் உலக சுகாதார மையம் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் வந்தது. உலக சுகாதார மையம் சீனாவிற்கு கட்டுப்பட்டு செயல்படுவதாக அதிபர் டிரம்ப் கூறினார்.

    உலகம் முழுக்க பெரு நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் அதிகரிப்பு.. 36 லட்சம் பேர்!உலகம் முழுக்க பெரு நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் அதிகரிப்பு.. 36 லட்சம் பேர்!

    டிரம்ப் முடிவு

    டிரம்ப் முடிவு

    முக்கியமாக உலக சுகாதார மையத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை அவர் நிறுத்தினார். அதோடு உலக சுகாதார மையத்தில் இருந்து வெளியேறுவதற்காக டிரம்ப் அறிவித்தார். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அதிகாரபூர்வமாக உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. அதோடு உலகா சுகாதார மையத்தை விசாரிக்கவும் டிரம்ப் யோசித்து வருகிறார்.

    என்ன கருத்து

    என்ன கருத்து

    இந்த நிலையில் உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் ஆதனாம் செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரம்பின் முடிவு குறித்து பேசும் போது அவர் கண்ணீர் விட்டுஅழுதார். அவர் தனது பேட்டியில், நம்முடைய உலகம் கொரோனா என்று பெரிய வைரஸை எதிர்கொண்டு உள்ளது. இப்போது நாம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டிய நேரம்.

    சண்டை கூடாது

    சண்டை கூடாது

    இப்போது நாம் மோதலில் ஈடுபட கூடாது. நாம் ஒரு பொது எதிரியை எதிர்கொண்டு இருக்கிறோம். இந்த கொரோனா பாதிப்பை நாம் தனியாக எதிர்கொள்ள முடியாது. தனியாக பிரிந்து நாம் இதை எதிர்கொள்ள முடியாது. நாம் ஒன்றாக இருப்பது மட்டுமே இதை எதிர்க்க ஒரு தீர்வாக இருக்கும்.

    உலகை ஆட்டிப்படைக்கிறது

    உலகை ஆட்டிப்படைக்கிறது

    இந்த வைரஸ் நம்முடைய உலகை ஒரு பிணைக்கைதி போல பிடித்துக் கொண்டது. அதில் இருந்து நாம் விடுபட வேண்டும். நாங்கள் எந்த நாட்டிற்கும் சார்பாக இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளின் உதவியும் எங்களுக்கு தேவை. எங்கள் மீது தவறான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் ஆதனாம் கண்ணீரோடு குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Coronavirus: WHO chief cried in the press meet after Trump's accusations against it .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X