நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா.. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனையை நிறுத்தி வைக்க முடிவு.. ஹு பரபரப்பு அறிவிப்பு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை - இந்தியா காட்டம்

    மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் முயன்று வந்தது. இந்த மருந்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த இரண்டு மாதம் முன் பரிந்துரை செய்தார்.

    ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் அதிக பின் விளைவுகளை கொண்ட மருந்து ஆகும். இந்தியாவுடன் சண்டை போட்டு அவரை இந்த மருந்தை வாங்கினார்.

    நன்றாக இருக்கிறேன்.. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு!நன்றாக இருக்கிறேன்.. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு!

    டிரம்ப் மருந்து

    டிரம்ப் மருந்து

    அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேரியாவை தடுக்க உதவும் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனா தாக்குதலுக்கு தடுப்பாக தான் உட்கொண்டு வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் இந்த மருந்து அமெரிக்காவில் பெரிய பலன் அளிக்கவில்லை. இந்த மருந்தை உட்கொண்ட கொரோனா நோயாளிகள் பலியானதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இதை உட்கொள்வதை டிரம்ப் நிறுத்தி உள்ளார்.

    அதிரடி முடிவு

    அதிரடி முடிவு

    இந்த நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனையை நிறுத்த வைக்க, அதன் பயன்பாட்டை நிறுத்தி வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. அதன்படி இதுவரை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வைத்து நிறைய சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    மொத்தமாக நிறுத்த முடிவு

    மொத்தமாக நிறுத்த முடிவு

    இந்த முடிவுகளுக்கான புள்ளி விவரங்களை உலக சுகாதார மையத்தின் டேட்டா பாதுகாப்பு சோதனை மையம் சோதனை செய்து வருகிறது. அதில் முடிவுகள் வந்த பின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்து அறிவிப்போம். அதுவரை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    மலேரியா எப்படி

    மலேரியா எப்படி

    அதே சமயம் கொரோனா வைரஸ் தவிர மலேரியா போன்ற பாதிப்பிற்கு எப்போதும் போல ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்தது. இந்தியாவில் சமீபத்தில் இதன் பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது உலக சுகாதார மையம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    English summary
    Coronavirus: WHO puts halt on the clinical trial of Hydroxychloroquine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X