நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ்.. ஸ்பானிஷ் ஃப்ளூ போல மீண்டும் மீண்டும் வராது.. முதல்முறையாக நல்ல விஷயத்தை சொன்ன ஹு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஸ்பானிஷ் ஃப்ளூ போல பல வருடங்கள் நம்மை தாக்காமல் இரண்டு வருடத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலுமாக மறைந்து விடும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    4ல் ஒரு இந்தியருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி

    கொரோனா பாதிப்பு தொடங்கிய சமயத்தில் இருந்தே அது தொடர்பாக தினமும் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயங்களை மட்டுமே உலக சுகாதார மையம் பேசி வந்தது. கொரோனா பாதிப்பு குறையாது, இனிமேல்தான் உலகிற்கு கொரோனா பீக் வர போகிறது.

    கொரோனா இரண்டாம் அலை எப்போது வேண்டுமானாலும் வரும். கொரோனா தடுப்பு மருந்து பலன் அளிக்குமா என்பது சந்தேகம்தான் என்று, தொடர்ந்து கொரோனா குறித்து எதிர்மறையான கருத்துக்களை மட்டுமே உலக சுகாதார மையம் தெரிவித்து வந்தது.

    உலகம் முழுக்க ஒரே நாளில் 247067 கொரோனா கேஸ்கள்.. கட்டுக்கடங்காத வேகம்.. 23,097,230 பேர் பாதிப்பு! உலகம் முழுக்க ஒரே நாளில் 247067 கொரோனா கேஸ்கள்.. கட்டுக்கடங்காத வேகம்.. 23,097,230 பேர் பாதிப்பு!

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் முதல்முறையாக கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு தகவலை உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அப்படியே குறைந்து இரண்டு வருடத்தில் இந்த வைரஸ் மொத்தமாக இல்லாமல் போய்விடும்.

    ஸ்பானிஷ் ஃப்ளூ எப்படி

    ஸ்பானிஷ் ஃப்ளூ எப்படி

    ஸ்பானிஷ் ஃப்ளூ பாதிப்பை விட இது குறைவான காலத்தில் மறைந்து விடும். 2 வருடத்திற்கும் குறைவான காலத்தில் கொரோனா வைரஸ் மொத்தமாக மறைந்துவிடும் என்று நம்புகிறோம் . ஸ்பானிஷ் ஃப்ளூவை நாம் கட்டுப்படுத்த முடியாமல் திணறினோம். ஆனால் இந்த கொரோனா வைரசை நாம் கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    வளர்ச்சி இல்லை

    வளர்ச்சி இல்லை

    அந்த காலத்தில் போதிய வளர்ச்சி இல்லை. மருந்துகள் இல்லை. தொழில்நுட்பம் இல்லை. ஆனால் இப்போது மருத்துவ உலகம் முன்னேறி இருக்கிறது. உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து செயலாற்ற தொடங்கி உள்ளது. இதனால் எளிதாக சோதனைகளை, ஆராய்ச்சிகளை செய்ய முடியும். நாம் பல வகைகளில் முன்னேறி இருக்கிறோம்.

    மிக வேகம்

    மிக வேகம்

    எளிதாக, வேகமாக, பாதுகாப்பான தடுப்பு மருந்துகளை நாம் உருவாக்க முடியும். இதனால் ஸ்பானிஷ் ஃப்ளூ போல இல்லாமல் கொரோனாவிடம் இருந்து வேகமாக தப்பிக்க முடியும் என்று உலக சுகாதார மைய தலைவர் தெரிவித்துள்ளார். ஸ்பானிஷ் ஃப்ளூ எனது 1918ல் ஏற்பட்ட நோய் தாக்குதல் ஆகும். மனித குலத்தை தாக்கிய கொடூரமான நோய்களில் இதுவும் ஒன்றாகும்.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    உலகம் முழுக்க 8 லட்சம் பேர் பலியானார்கள். 23 மில்லியன் பேர் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3வருடம் நீடித்த இந்த ஸ்பானிஷ் ஃப்ளூ தாக்குதல் நீடித்தது. மொத்த நான்கு அலைகளாக வந்தது. ஏழை நாடுகளை இந்த ஃப்ளூ அதிகம் தாக்கியது.

    English summary
    Coronavirus won't be like a Spanish flu, it may end in 2 years says WHO chief.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X