நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்.. உலகில் இருந்து இப்போதைக்கு போகாது.. "ஹு" தலைவர் வார்னிங்!

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் இருந்து தற்போது போகாது என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் அதனாம் குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் இருந்து தற்போது போகாது என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் அதனாம் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    கொரோனா உலகில் இருந்து இப்போதைக்கு போகாது - WHO தலைவர் எச்சரிக்கை

    இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக லாக் டவுன் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 1 மாதம் ஆகி உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவதற்கு பதிலாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக 21450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

    அமெரிக்காவில் உலகிலேயே அதிகமாக கொரோனா காரணமாக 849,092 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவின் தீவிரம் குறித்து உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் அதனாம் பேட்டி அளித்துள்ளார்.

    குணமான பலருக்கு 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாசிட்டிவ்.. சீனா மருத்துவர்கள் அதிர்ச்சி குணமான பலருக்கு 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாசிட்டிவ்.. சீனா மருத்துவர்கள் அதிர்ச்சி

    டெட்ராஸ் அதனாம் என்ன சொன்னார்

    டெட்ராஸ் அதனாம் என்ன சொன்னார்

    அவர் தனது பேட்டியில், கொரோனாவிற்கு எதிரான போரில் பல நாடுகள் இப்போதுதான் முதல் கட்டத்தில் இருக்கிறது. பல நாடுகள் தொடக்க கட்டத்தில் இருக்கிறது. நாங்கள் ஜனவரி 30ம் தேதியே உலகம் முழுக்க இதற்காக எமர்ஜென்சியை அறிவித்துவிட்டோம். உலக நாடுகள் தயார் ஆக வேண்டும் என்பதற்காக எமர்ஜென்சியை அறிவித்துவிட்டோம்.

    கேஸ்கள் அதிகம்

    கேஸ்கள் அதிகம்

    ஐரோப்பாவில் இப்போதுதான் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அல்லது அங்கு கேஸ்கள் கொஞ்சம் குறைந்து வருகிறது. கேஸ்கள் தற்போது குறைவாக இருந்தாலும் ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளின் நிலைமை மோசமாக இருக்கிறது. பல நாடுகளில் இப்போதுதான் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது.

    துரத்திக் கொண்டே இருக்கும்

    துரத்திக் கொண்டே இருக்கும்

    யாரும் எந்த தவறும் செய்ய கூடாது. நாம் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும். இந்த வைரஸ் இன்னும் நம்முடன் பல நாட்களுக்கு இருக்கும். நம்மை துரத்திக் கொண்டே இருக்கும். இப்போதைக்கு இதன் பாதிப்பு நம்மை விட்டு போகாது. இன்னும் சில நாடுகள் இனிமேல்தான் கொரோனா காரணமாக பாதிக்க போகிறது. இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்று தெரியாது.

    சில நடவடிக்கை

    சில நடவடிக்கை

    நாம் திரும்பி பார்த்தால் சில நடவடிக்கைகளை சரியாக எடுத்து இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். மிக சரியான நேரத்தில் உலகம் முழுக்க சில நாடுகள் லாக் டவுனை அறிவித்து இருக்கிறது. நமக்கு தற்போது கொரோனாவிற்கு எதிராக செயலாற்ற போதிய நேரம் இருக்கிறது. என்னை சிலர் பதவி விலக சொல்கிறார்கள். நான் இந்த பணியை காதலிக்கிறேன். எனக்கு பதவி விலகும் எண்ணம் இல்லை, என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் அதனாம் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Coronavirus won't leave us now, Will stalk more says the WHO chief, asking for more lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X