நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடங்கியது.. டிரம்ப் எச்சரித்த 'மிக மோசமான வாரம்'.. கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா.. 9610 பேர் பலி

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1200 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1200 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலின் மிக மோசமான வாரத்தில் அமெரிக்கா அடியெடுத்து வைத்துள்ளது.

Recommended Video

    பெண் புலிக்கு கொரோனா வைரஸ்.. அமெரிக்காவில் நடந்த அதிச்சி சம்பவம் - வீடியோ

    மிக பயங்கரமான நாட்கள் காத்து இருக்கிறது. வரும் இரண்டு வாரங்கள் மிக மோசமாக இருக்க போகிறது. அடுத்து வரும் நாட்கள் மிகவும் வலி மிகுந்த நாட்களாக இருக்க போகிறது. நாம் வாழ்வா அல்லது சாவா என்ற நிலையில் இருக்கிறோம்.

    நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை இதனால் அமெரிக்காவில் பலியாக வாய்ப்புள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு இந்த வைரஸ் வீரியம் அதிகம் ஆகும், என்று அமெரிக்கா அதிபர் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

    மீண்டு வந்த சீனா.. முடங்கியது அமெரிக்கா.. உலகம் முழுக்க 12,72,737 பேருக்கு கொரோனா.. 69,418 பேர் பலி!மீண்டு வந்த சீனா.. முடங்கியது அமெரிக்கா.. உலகம் முழுக்க 12,72,737 பேருக்கு கொரோனா.. 69,418 பேர் பலி!

    டிரம்ப் சொன்ன மோசமான வாரம்

    டிரம்ப் சொன்ன மோசமான வாரம்

    டிரம்ப் குறிப்பிட்ட மோசமான வாரம் தற்போது வந்துவிட்டது. அவர் சொன்ன மிக மோசமான வாரம் தற்போது தொடங்கி உள்ளது. இன்றில் இருந்து கொரோனா அமெரிக்காவில் மிக மோசமாக தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றபடி நேற்று ஒரே நாளில் 1200 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். வாரத்தின் தொடக்கமே அங்கு மிக மோசமான நாளாக மாறி உள்ளது.

    அமெரிக்கா நிலை என்ன

    அமெரிக்கா நிலை என்ன

    கொரோனா காரணமாக உலகில் மிக மோசமான பாதிப்பை சந்தித்த நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற்றுள்ளது. அமெரிக்காவில் 9/11 தாக்குதல், உலகப்போர்கள், மற்ற மோசமான தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்ட பாதிப்பை விட மிக மோசமான பாதிப்பை கொரோனா ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காரணமாக அமெரிக்காவில் 336,550 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அமெரிக்காவில் 9610 பேர் பலியாகி உள்ளனர்.

    ஒரே நாளில் பலருக்கு கொரோனா

    ஒரே நாளில் பலருக்கு கொரோனா

    நேற்று அமெரிக்காவில் புதிதாக 25000 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1200 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டது இதுதான் முதல்முறை. இத்தாலியில் கூட இவ்வளவு மோசமான நிலை ஏற்படவில்லை. அமெரிக்க வரலாற்றில் நேற்றைய நாள் மிக மோசமானதாக பார்க்கப்படுகிறது.

    நியூயார்க் எப்படி

    நியூயார்க் எப்படி

    அமெரிக்காவில் நியூயார்க்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. நியூயார்க் மாகாணத்தில், மொத்த சீனாவை விட அதிக பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நியூயார்க்கில் 123,018 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 4159 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மிக மோசமான மாகாணம் என்ற பெயரை நியூயார்க் பெற்றுள்ளது. நியூஜெர்சியில் 37,505 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 917 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.

    வரும் நாட்கள் எப்படி

    வரும் நாட்கள் எப்படி

    வரும் நாட்களில் அமெரிக்காவில் கொரோனா இன்னும் வீரியம் அடையும் என்று கூறுகிறார்கள். இன்றில் இருந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குறைந்த பட்சம் அமெரிக்காவில் கொரோனா காரணமாக 1 லட்சம் பேர் வரை பலியாகும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்கா உலக வரலாற்றில் மிக மோசமான பாதிப்பை இதனால் சந்திக்க போகிறது என்று கூறுகிறார்கள் .

    English summary
    Coronavirus: Worst week starts as President Trump warns US people, 9610 died so far due to pandemic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X