நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் எப்போது கிடைக்கும் தெரியுமா?.. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்

கோவேக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி கிடைக்க உள்ளது

Google Oneindia Tamil News

நியூயார்க்: கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழு அக்டோபர் 26-ம் தேதி கூடுகிறது... இதையடுத்து நமது நாடடு தயாரிப்பான கோவேக்சினுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்று நம்பப்படுகிறது.

2 வருடத்துக்கு முன்பு சீனாவின் வுகான் நகரில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை மிரட்டி கொண்டிருக்கிறது..

8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

இதன் வீரியம் குறைந்தபாடில்லை... தொற்றும் முழுவதுமாக ஒழியவில்லை... முதல் அலையைவிட 2வது அலை உலக மக்களை நிலைகுலைய செய்துவிட்டது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.14 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது.. இதுவரை 21.86 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.. அதேசமயம், இந்த தொற்று இதுவரை 49.13 லட்சத்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கி உள்ளது.. இன்னும் 1.78 கோடிக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சையில்தான் உள்ளனர்.. இதில், 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை சீரியஸாக உள்ளதாக செய்திகள் வருகின்றன.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.. இந்தியா 2வது இடத்தில் உள்ளது... பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இதுவரை இந்த தொற்றுக்கு சிகிச்சைகளும், தீர்வுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.. எனினும் தடுப்பூசி மட்டுமே இப்போதைக்கு ஒரே தடுப்பாக நமக்கு உள்ளது.. அதனால்தான் பெரும்பாலான நாடுகள் தடுப்பூசிகளை தங்கள் மக்களுக்கு செலுத்தி கொண்டிருக்கின்றன.

Recommended Video

    COVAXIN, COVISHIELD தடுப்பூசி பயனளிக்குமா? | Dr. Dr.Shanthi ravindranath Explain | Oneindia Tamil
     உலக சுகாதார நிறுவனம்

    உலக சுகாதார நிறுவனம்

    ஒருசில புதிய தடுப்பூசிகள் குறித்த ஆய்வும் நடந்து கொண்டிருக்கிறது.. இதில், பாரத் பயோடெக் நிறுவனமானது, தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியது.. ஆனால், இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் இதற்கு கிடைக்காமலேயே உள்ளது.. பன்னாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படும் தடுப்பூசி பட்டியலிலும் கோவேக்சின் இடம்பெறவில்லை.. இதற்காக, கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கேட்டு, உலக சுகாதார நிறுவனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது...

    கோவேக்சின்

    கோவேக்சின்

    கோவேக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று ஹூ எனப்படும் உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழு அக்டோபர் 26-ம் தேதி கூடுகிறது... இதை பற்றி அந்த அமைப்பின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் சொன்னதாவது:

    ஒப்புதல்ஒப்புதல்

    ஒப்புதல்ஒப்புதல்

    "கோவேக்சின் தடுப்பூசியுடன் உலக சுகாதார நிறுவனமானது மிகவும் மிக நெருக்கமாக பயணித்து வருகிறது... தடுப்பூசிகளுக்கு அதிகமான ஒப்புதல் தர வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்.. அப்போதுதான், அதன்மூலம், அதிக மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க செய்ய முடியும்" என்று தெளிவுபடுத்தி உள்ளார். இதனிடையே, ஐநாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது.

    உறுதி

    உறுதி

    அதில், "கடந்த செப்டம்பர் 27ம் தேதியே கோவாக்சின் தரப்பில் கூடுதல் தரவுகள் அளிக்கப்பட்டிருந்தது.. அதை ஐநாவின் நிபுணர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.. அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் அதில் விடைகள் இருப்பின் அடுத்த வாரம் இறுதி முடிவு கிடைக்கும்" என்று ஐநா சபையின் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.. இதையடுத்து, கூடிய சீக்கிரம் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கிடைக்கும் என்பது இதன்மூலம் மீண்டும் தெளிவாகிறது.

    English summary
    Covaxin approval: WHO's technical advisory group to decide on 26th October 2021
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X