நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவிற்கு எதிராக பெரிதும் நம்பப்பட்ட மருந்து.. ரெமிடிஸ்வரை லிஸ்டிலிருந்து நீக்கிய ஹு.. பின்னணி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் என்று பெரிதும் நம்பப்பட்ட ரெமிடிஸ்வர் மருந்தை, உலக சுகாதார மையம் தனது கொரோனா மருந்துகளின் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. இந்த மருந்தின் பயன்பாட்டிற்கு எதிராக எச்சரிக்கை விடுத்து இருந்த உலக சுகாதார மையம் தற்போது இதை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக ரெமிடிஸ்வர் மருந்து தொடக்க காலத்தில் சோதனை செய்யப்பட்டது. முதல் கட்ட சோதனையில் இந்த ரெமிடிஸ்வர் மருந்து தோல்வியை தழுவியது.

ஆனால் அதன்பின் நடந்த பல்வேறு கட்ட சோதனையில் இந்த மருந்து கொரோனாவை ஓரளவிற்கு குணப்படுத்துகிறது என்றும் கூறப்பட்டது. கில்லட் சைன்ஸ் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான இந்த மருந்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார்.

ஆபரேஷன் கொரோனா வேக்சின்.. வேகம் எடுக்கும் இந்தியா.. வல்லுனர்களுடன் பிரதமர் மோடி நடத்திய மீட்டிங்!ஆபரேஷன் கொரோனா வேக்சின்.. வேகம் எடுக்கும் இந்தியா.. வல்லுனர்களுடன் பிரதமர் மோடி நடத்திய மீட்டிங்!

கொரோனா

கொரோனா

இந்த மருந்தை தான் கொரோனா பாதிப்பின் போது எடுத்துக்கொண்டேன் என்றும் குறிப்பிட்டார். இந்த நிலையில் ரெமிடிஸ்வர் மருந்துக்கு எதிராக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த மருந்து கொரோனா நோயாளிகளை குணமாக்குகிறது என்ற ஆதாரம் இல்லை. நோயாளிகள் வேகமாக குணமாவதற்கான ஆதாரம் இல்லை.

டேட்டா

டேட்டா

இதுவரை வெளியான டேட்டாக்கள் எதுவும் இந்த மருந்துக்கு சாதகமாக இல்லை என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ரெமிடிஸ்வர் மருந்தை, உலக சுகாதார மையம் தனது கொரோனா மருந்துகளின் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. கொரோனாவை குணமாக்கும் வாய்ப்புள்ள மருந்துகள் என்ற பட்டியலில் இருந்து இதை உலக சுகாதார மையம் நீக்கி உள்ளது.

வேண்டாமா

வேண்டாமா

இதன் மூலம் இந்த மருந்தை வாங்க வேண்டாம் என்று உலக சுகாதார மையம் உலக நாடுகளுக்கு சிக்னல் கொடுத்துள்ளது. இந்த மருந்தை கொரோனாவிற்கு பரிந்துரை செய்ய முடியாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெமிடிஸ்வர் மருந்தை, உலக சுகாதார மையம் இப்படி பட்டியலில் இருந்து நீக்கியது பல நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

பல நாடுகள்

பல நாடுகள்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெமிடிஸ்வர் மருந்தை பல நாடுகள் வாங்கியது. இந்தியாவிலும் சில நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தங்களை செய்தது. மொத்தமா 50 நாடுகளில் ரெமிடிஸ்வர் மருந்தை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது.

English summary
Covid 19: WHO removes Remdesivir from the list of medications that can cure Corona virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X