நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Operation Warp Speed: அமெரிக்காவிற்கு கை கொடுத்த "வேக்சின்" அஸ்திரம்.. வேலை செய்யும் டிரம்ப் பிளான்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர் நிறுவனம் தயாரித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி பெற அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் "Operation Warp Speed'' என்ற திட்டத்தின் கீழ் இந்த வேக்சின் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் தற்போது இறுதிக்கட்ட அனுமதி பெறுவதற்காக காத்து இருக்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் உருவாக்கி இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து 94.5% வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனம் சேர்ந்து உருவாக்கி இருக்கும் வேக்சின் 95% வெற்றி அடைந்துள்ளது. இதற்கான ஆய்வு முடிவுகள் இன்று வெளியானது.

2வது வேக்சினை களமிறக்கும் அமெரிக்கா.. கொரோனா வேக்சின் 95% வெற்றி.. ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு2வது வேக்சினை களமிறக்கும் அமெரிக்கா.. கொரோனா வேக்சின் 95% வெற்றி.. ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு

அனுமதி

அனுமதி

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர் நிறுவனம் தயாரித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி பெற அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை இந்த மருந்தைக்கு அனுமதி பெற அந்த நிறுவனம் விண்ணப்பிக்க உள்ளது. மருந்துக்கு பின்விளைவுகள் பெரிய அளவில் இல்லை என்பதால் இதற்கு உடனே அனுமதி கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

எப்படி

எப்படி

இந்த மருந்தின் 50 மில்லியன் டோஸ்களை தயாரிக்க ஃபைசர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இன்னும் ஒன்றரை மாதங்களில் 50 மில்லியன் டோஸ்களை உருவாக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இன்னொரு பக்கம் மாடர்னா நிறுவனம் தனது வேக்சினில் 20 மில்லியன் டோஸ்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனமும் அவசர அனுமதிக்கு விண்ணப்பிக்க உள்ளது.

அனுமதி அளிக்கும்

அனுமதி அளிக்கும்

அதேபோல் அமெரிக்க அரசும் இரண்டு மருந்துக்கும் விரைவில் அனுமதி அளிக்கும் என்று கூறுகிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் பதவியில் இருக்கும் போதே கொரோனா வேக்சினுக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளார். கொரோனா வேக்சின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்காக அமெரிக்காவில் "Operation Warp Speed'' என்ற திட்டத்தை அதிபர் டிரம்ப்தான் தொடங்கி வைத்தார்.

ஆபரேஷன்

ஆபரேஷன்

தேர்தல் தோல்வியில் ஏற்பட்ட களங்கத்தை துடைக்க அவர் இந்த வேக்சின் அஸ்திரத்தை கையில் எடுப்பார் என்கிறார்கள். வேகமாக மருந்துகளுக்கு அனுமதி அளித்து தங்கள் மக்களுக்கு கொடுப்பதே இந்த ஆபரேஷன் ஆகும்.இதற்காக பல பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவு செய்து வருகிறது. மாடர்னா, பிபிசெர் (Pfizer) நிறுவனத்திற்கு இதன் மூலம்தான் நிதி வழங்கப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு 1450 கோடி ரூபாயை செலவு செய்ய அமெரிக்கா முதல் கட்டமாக ஒப்புதல் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

 அதே திட்டம்

அதே திட்டம்

தற்போது "Operation Warp Speed'' திட்டத்தின் கீழ்தான் இந்த இரண்டு வேக்சின்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் டிரம்ப் கொண்டு வந்தது ஆகும். இதனால் இதற்கான கிரெடிட்டை பெறுவதற்கு டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். கொரோனாவை வீழ்த்திய அதிபர் என்று பெயர் எடுப்பதற்காக டிரம்ப் முயன்று வருகிறார். இதனால் விரைவில் ஃபைசர் கொரோனா வேக்சினுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
Covid Vaccine: Trump may give green signal for Pfizer Inc vaccines approval in fastrack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X