நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடங்கிய வேக்சின் யுத்தம்.. ரஷ்யா, சீனாவின் மருந்துகளை பயன்படுத்த மாட்டோம்..அமெரிக்கா முடிவு.. பகீர்

Google Oneindia Tamil News

நியூயார்க்: ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க வாய்ப்பு இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வல்லரசு நாடுகளின் கனவில் அமெரிக்கா மண் அள்ளி போட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

Recommended Video

    Corona vaccine: மக்களுக்கு கொடுக்க தீவிரம் காட்டும் Russia

    கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுக்க 120க்கும் அதிகமான நிறுவனங்கள் தடுப்பு மருந்து சோதனையை செய்து வருகிறது. இதில் 24 மருந்துகள் தற்போது மனித சோதனை கட்டத்தில் இருக்கிறது. அதிலும் இந்தியாவில் இரண்டு மருந்துகள் மனித சோதனை கட்டத்தில் உள்ளது.

    இந்தியாவில் பாரத் பயோடேக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்து மனித சோதனையில் நம்பி அளித்துள்ளது. அதேபோல் ஆக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளது .

    முதுகில் குத்திய ஜிங்பிங்.. சீனாவின் செயலால் புடின் கோபம்.. உறவை முறிக்க ரெடியாகும் ரஷ்யா.. பின்னணி முதுகில் குத்திய ஜிங்பிங்.. சீனாவின் செயலால் புடின் கோபம்.. உறவை முறிக்க ரெடியாகும் ரஷ்யா.. பின்னணி

    ரஷ்யா கொரோனா

    ரஷ்யா கொரோனா

    இந்த நிலையில்தான் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா கடந்த மாதம் அறிவித்தது. இந்த மாதம் இந்த மருந்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டாட வர போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டது. மனிதர்கள் மீது இந்த சோதனையை செய்து முடித்து இருக்கிறோம். விரைவில் இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர போகிறோம் என்று ரஷ்யா கூறியுள்ளது .

    சீனா மருந்து

    சீனா மருந்து

    அதேபோல் இன்னொரு பக்கம் சீனா கொரோனா வைரஸ் தடுப்பு சோதனையில் முன்னிலை வகித்து வருகிறது. சீனாவிலும் இதேபோல் நான்கு முன்னணி நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் முன்னிலை வகித்து வருகிறது. சீனோவேக், கேன்சினோ ஆகிய நிறுவனங்கள் இதில் இறுதிக்கட்ட மனித சோதனையில் இருக்கிறது. இரண்டு மருந்தும் எப்போது வேண்டுமானாலும் மக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    வேண்டாம்

    வேண்டாம்

    இந்த நிலையில் ரஷ்யா மற்றும் சீனாவின் மருந்துகளை வாங்க போவதில்லை. இரண்டு நாடுகளின் தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வாய்ப்பு இல்லை என்று அமெரிக்கா வெளிப்படையாக கூறியுள்ளது. வேக்சினை வைத்து அமெரிக்காவை கட்டுப்படுத்தலாம் என்று சீனாவும், ரஷ்யாவும் நினைத்தது. ஆனால் இரண்டு நாடுகளின் மருந்துகளை நம்பி இருக்க மாட்டோம் என்று அமெரிக்கா ஒரே அடியாக அறிவித்துள்ளது.

    என்ன சொன்னது

    என்ன சொன்னது

    இது தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் அந்தோணி பவுச்சி கூறியுள்ளதாவது, சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளின் மருந்துகளையும் நாங்கள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை. அவர்கள் முறையான சோதனைகள் செய்யவில்லை. இந்த மருந்துகள் பாதுகாப்பாக இருக்குமா என்பது சந்தேகம்தான். போதுமான எண்ணிக்கையில் இந்த மருந்தில் மக்கள் சோதனை செய்யப்படவில்லை.

    வாய்ப்பு இல்லை

    வாய்ப்பு இல்லை

    அதனால் அந்த நாடுகளின் மருந்துகளை பயன்படுத்த வாய்ப்பு இல்லை. மக்கள் மீது இந்த மருந்துகளை பயன்படுத்தும் முன் ரஷ்யா , சீனா இன்னும் அதிகமாக சோதனைகளை செய்ய வேண்டும். இன்னும் நிறைய பேரிடம் சோதனை செய்ய வேண்டும். அதன்பின்தான் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் . மருந்தை வைத்துக் கொண்டு அவசர பட கூடாது, என்று பவுச்சி கூறியுள்ளார்.

    அமெரிக்கா மருந்து

    அமெரிக்கா மருந்து

    இன்னொரு பக்கம் அமெரிக்காவும் சுயமாக கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அதிலும் அமெரிக்காவின் மாடர்னா ஐஎன்சி (Moderna) நிறுவனத்துடன் அமெரிக்க அரசு இணைந்து உருவாக்கி வரும் தடுப்பு மருந்து உலகிலேயே அதிக பேரிடம் சோதனை செய்யப்பட கூடிய கொரோனா தடுப்பு மருந்தாக மாறியுள்ளது.

    அமெரிக்கா திட்டம்ம்

    அமெரிக்கா திட்டம்ம்

    அமெரிக்காவின் "Operation Warp Speed'' என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் முதல் வேக்சின் இது ஆகும். விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தில் அமெரிக்கா இந்த மருந்தை ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிறைய தடுப்பு மருந்துகளை உருவாக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

    English summary
    Covid Vaccine:We may not use Russia and China vaccine says US today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X