உலகில் கொரோனாவால் 26.87 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் 5 கோடியை தாண்டியது தொற்று
நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53.02 லட்சத்தை தாண்டியது. இதில் பல்வேறு நாடுகளில் தொற்று மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது..
இதனால் பெரும் மனித இழப்புகளும் ஏற்பட்டு விட்டன.. தொடர்ந்து பாதிப்புகளை தந்து வருகிறது... பல்வேறு நாடுகள் படுஜாக்கிரதையாக இருந்தும், மறுபடியும் தொற்று பாதிப்பில் சிக்கி உள்ளது கவலையை தந்து வருகிறது.
மிக வேகமாகப் பரவும் ஓமிக்ரான்.. கொரோனா பெருந்தொற்றின் போக்கையே மாற்றும்.. வார்னிங் கொடுத்த WHO

எண்ணிக்கை
குறிப்பாக, அதே சீனாவில் மீண்டும் அதிகமாக பரவ ஆரம்பித்துவிட்டது.. அதேபோல அமெரிக்கா முதலிடத்தில் கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பில் உள்ளது.. கொலம்பியா 11-வது இடத்தில் உள்ளது.. இங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53.02 லட்சத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53.02 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,302,088 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

சிகிச்சை
உலகம் முழுவதும் கொரோனாவால் 268,701,749 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 241,706,029 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.. 21,693,632 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கிலாந்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே தொற்று பரவல் தடுப்பில் கவனமாக இருந்தாலும், இப்போது மேலும் 20 ஆயிரம் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.. மொத்த பாதிப்பு 10,660,981 ஆக அதிகரித்துள்ளது..

இந்தியா
மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 135 ஆக உயர்ந்து வருகிறது.. அந்நாட்டில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,136,681 ஆக உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா கேஸ்கள் 34,674,408 பேர் ஆகும்.. புதிதாக நேற்று ஒரே நாளில் 8,167 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதுவரை 474,390 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.. ஒரேநாளில் 279 பேர் இறந்துள்ளனர்.. இதுவரை 34,097,388 நபர்கள் தொற்றில் இதுவரை குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்..

ரஷ்யா
அமெரிக்காவை பொறுத்தவரை 50,533,163 பேருக்கு இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. 108,266 கொரோனா கேஸ்கள் நேற்று ஒரே நாளில் பதிவாகி உள்ளது.. இதுவரை 815,237 பேர் தொற்றுக்கு இறந்துள்ளனர்.. நேற்று மட்டும் 1056 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 39,866,556 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். ரஷ்யாவில் 9,925,806 பேரை கொரோனா இதுவரை தாக்கி உள்ளது.. நேற்று 30209 கொரோனா கேஸ்கள் புதிதாக பதிவாகி உள்ளன... துருக்கியில் 8,984,407 பேருக்கு கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. பிரேசிலில் 22,177,059 நபர்கள் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.