நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைவர்களின் தோல்வி இது.. டெல்லி வன்முறையை விமர்சித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்.. டிரம்பிற்கு குட்டு!

இந்தியாவில் நடக்கும் கலவரம் மனித உரிமைகளும், தலைமைப்பண்பும் தோல்வி அடைந்ததற்கான அடையாளம் என்று அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியாவில் நடக்கும் கலவரம் மனித உரிமைகளும், தலைமைப்பண்பும் தோல்வி அடைந்ததற்கான அடையாளம் என்று அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    டெல்லி வன்முறையை விமர்சித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்

    டெல்லியில் தற்போது கொஞ்சம் அமைதி திரும்பி உள்ளது. ஆனால் இன்னும் அங்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள். டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பெரிய அளவில் கலவரம் நடந்து வந்தது. இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 34 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் இதில் மோசமாக காயம் அடைந்தனர். டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நடந்தது.

    அதிபர்

    அதிபர்

    இந்த டெல்லி கலவரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியாக இந்தியா வந்திருந்த போது நடந்தது. சரியாக அவர் டெல்லியில் தங்கி இருந்த போதுதான் கலவரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் டெல்லி கலவரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தார். அதில், எனக்கு தெரிந்த வரை சில தனிப்பட்ட தாக்குதல்கள் நடக்கிறது. நான் அதை பற்றி மோடியிடம் பேசவில்லை.

    டிரம்ப் என்ன சொன்னார்

    டிரம்ப் என்ன சொன்னார்

    இந்தியாதான் இதை கட்டுப்படுத்த வேண்டும். இதை பற்றி இந்தியா மட்டுமே முடிவு எடுக்க முடியும். நான் கருத்து சொல்ல முடியாது, என்று டிரம்ப் குறிப்பிட்டார். டிரம்பின் இந்த விட்டேத்தியான பேச்சு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக் கட்சி டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ஜனநாயக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான பெர்னி சாண்டர்ஸ் இதை கடுமையாக எதிர்த்துள்ளார்.

    செம விமர்சனம்

    செம விமர்சனம்

    பெர்னி சாண்டர்ஸ் தனது பேச்சில், இந்தியாவில் 200 மில்லியன் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதுதானே சொந்த நாடு. ஆனால் அங்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. அரசு இதை தடுக்கவில்லை. அங்கு இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர். பலர் மோசமாக காயம் அடைந்துள்ளனர். இந்த கலவரத்தை தடுக்க அந்நாட்டு அரசு தவறிவிட்டது.

    பெர்னி சாண்டர்ஸ் கருத்து

    பெர்னி சாண்டர்ஸ் கருத்து

    அதிபர் டிரம்ப், இதை இந்தியாதான் கையாள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த கலவரமும், டிரம்பின் பேச்சும் தலைவர் தோல்வி அடைந்ததற்கான அடையாளம் ஆகும். மனித உரிமைகள் தோல்வி அடைந்ததற்கான அடையாளம் இது என்று, பெர்னி சாண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்து இரண்டு நாட்டிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெர்னி சாண்டர்ஸ் குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதில் முன்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Delhi Violence: US's Leading Democratic Presidential candidate Bernie Sanders says it is a "failure of leadership".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X