"ஆபாச பட நடிகர்".. சர்ச் பாதிரியாருக்கு 83 வயசில் வந்த விபரீதம்.. எப்ப பார்த்தாலும் ஒரே ஜாலிதான்..!
நியூயார்க்: எந்நேரமும் சர்ச்சிலேயே வாழ்நாளை செலவிட்ட பாதிரியார் ஒருவர், ரிடையர் ஆன பிறகு சம்பந்தமே இல்லாத ஒரு துறைக்குள் நுழைந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் வசித்து வருபவர் நார்ம் செல்ப்.. 83 வயதாகிறது.. இவர் ஒரு கிறிஸ்வத மத போதகர்.. ஆனால் பாதிரியார் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
அன்று ஜெ.- சொத்து குவிப்பு வழக்கு: ஹரியானா மாஜி முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை
இவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. 30 வருடங்களாகவே குடும்பமும் நடத்தி வந்துள்ளார்.. ஒன்றாக குடும்பத்துடன் வசித்தாலும், பெரும்பாலும் இவர் சர்ச்சில்தான் தங்கி இருப்பாராம்..

பாதிரியார்
எந்நேரமும் ஊழியம், ஊழியம் என்றே வாழ்நாளில் பெரும்நாட்களை செலவிட்டு வந்துள்ளார்.. அதற்கு பிறகுதான் ஓய்வு பெற்றுள்ளார்.. பாதிரியாராக பல வருட காலம் சேவையாற்றிய நிலையில், அதுவும் எந்நேரமும் சர்ச்சிலேயே இருந்த நிலையில், ஓய்வுபெற்றவுடன் இப்படி ஒரு ஆசை இவருக்கு வரும் என்று ஒருத்தரும் கனவில் கூட நினைக்கவில்லை.. ஆபாச படங்களில் நடிக்க ரொம்ப ஆசைப்பட்டாராம்.. அதன்படி, கடந்த 2017-லேயே ஆபாச படங்களில் நடிக்கவும் முடிவு செய்துவிட்டார்.

ஆசை.. ஆசை
இதென்ன விபரீதம் என்று இந்த ஆசையை கேள்விப்பட்டவர்கள் எல்லாம் வாயை பிளக்கிறார்கள்.. எனினும், இந்த ஆபாச பட வாழ்க்கை குறித்து, நார்ம் செல்ப் சொன்னது என்ன தெரியுமா? "ஆன்மீக வாழ்வின் மகிழ்ச்சியான பகுதிதான் செக்ஸ்.. அப்படித்தான் நாம் அதை நினைக்க வேண்டும்.. நாம ஒரு விருந்தில் கலந்து கொள்வோம் இல்லையா, அதுபோலதான் இந்த செக்ஸும்.. அதனால்தான், இந்த தொழிலை நான் விருப்பத்துடன் செய்து வருகிறேன்...

ஆபாசம்
இதுவரை கேமரா முன்பு மேற்கொள்ளும் இந்த தொழிலை, எந்தவித காசும் பெறாமல் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். ஆபாச பட நடிகராக இருப்பதில் எனக்கு பெருமையே.. அந்த அனுபவம் மகிழ்ச்சியானது... உண்மையை சொல்லட்டுமா? என்னுடைய உடம்பு ஒரு கோவில்.. இதை நான் கொஞ்ச நாளைக்கு முன்புதான் தெரிந்து கொண்டேன்.. அப்போது, நெருங்கிய உறவுநிலையும், மெய் மறந்த இன்பமும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும்...

ஆபாச நாயகன்
இது ஆன்மீகத்திற்கு ஒப்பானது. புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் செக்ஸ் சார்ந்த விஷயங்கள் எல்லாம் ஆபத்து என்கிறது இந்த சமூகம்.. இப்படிப்பட்ட எண்ணத்தை இந்த சமூகம் மாற்றும் வரை நான் ஆபாச படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டே இருப்பேன்.. ஆபாச பட நாயகன் என்ற பட்டத்தை தந்திருக்கிறார்கள்..

ஆபாசம்
இதுவும் எனக்கு மகிழ்ச்சியே... அதேசமயம் "ஆபாசம்" (போர்ன்) என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை... ஒரு அழுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் இருந்து இறுதியாக வெளியே வந்து, ஒவ்வொரு மரபுசார்ந்த விதிகளில் இருந்தும் வெளியே வந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதற்குதான் இந்த சமூகம் "போர்ன்" என பெயரிடப்பட்டு உள்ளது... மற்றபடி ஆபாச பட நாயகன் என்று என்னை எல்லாரும் சொல்வது சந்தோஷமாக இருக்கிறது என்கிறார் இந்த 83 வயசு தாத்தா..!