நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாலருக்கு எதிராக களமிறங்கிய ரஷ்யா, யூ.கே.. அணி சேர்ந்த இந்தியா.. அமெரிக்கா அதிர்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிராக சர்வதேச வர்த்தகத்தில் தங்கள் நாட்டு பணத்தையே பயன்படுத்த ரஷ்யாவும், பிரிட்டிஷும் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டாலருக்கு எதிராக களமிறங்கிய ரஷ்யாவுடன் கைகோர்க்கும் இந்தியா- வீடியோ

    நியூயார்க்: அமெரிக்க டாலருக்கு எதிராக சர்வதேச வர்த்தகத்தில் தங்கள் நாட்டு பணத்தையே பயன்படுத்த ரஷ்யாவும், பிரிட்டிஷும் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.

    அமெரிக்காவிற்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக நாடுகள் அணி சேர்ந்து வருவது உலக அரசியலில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் முக்கியமாக இந்தியாவும் அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்கி உள்ளதுதான் பலருக்கும் ஆச்சர்யம்.

    அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஈரானிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கியது, ரஷ்யாவிடம் எஸ் - 400 ரக ஏவுகணைகளை வாங்கியது என்று தொடர்ந்து அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்து வருகிறது. அதன் ஒருகட்டமாக தற்போது டாலருக்கு எதிராகவும் களமிறங்க உள்ளது.

    இந்தியா அதிரடி

    இந்தியா அதிரடி

    நேற்று துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் நிறுவன அதிபருடன் பிரதமர் மோடி வருடாந்திர சந்திப்பை நடத்தினார். எல்லா வருடமும் நடக்கும் இந்த சந்திப்பில் எப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியமான விவாதம் ஒன்று செய்யப்பட்டது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் விற்கும் போது, டாலருக்கு பதிலாக இந்தியா ரூபாய் வழியாகத்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். உலகில் எண்ணெய் வள நாடுகளுக்கு மிக முக்கியமான கஸ்டமராக இந்தியா இருப்பதால் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    பிரிட்டிஷ் பணம்

    பிரிட்டிஷ் பணம்

    அதை தொடர்ந்து தற்போது பிரிட்டிஷ் நாடும், அவசியம் ஏற்படும் என்றால், அமெரிக்க டாலரை உலக வர்த்தகத்தில் பயன்படுத்த மாட்டோம் என்று முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக பவுண்டுகளை பயன்படுத்த முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தங்களது பங்கு சந்தையில், பவுண்டில் எளிதாக முதலீடு செய்யும் வகையில் திருத்தம் கொண்டு வர இருப்பதாக கூறியுள்ளது.

    சின்னையா ரஷ்யா

    சின்னையா ரஷ்யா

    இந்த நிலையில்தான் பிக்பாஸ் அமெரிக்காவிற்கு எதிராக சின்னையா ரஷ்யாவும் களமிறங்கி உள்ளது. தங்களது நாட்டு பணமான ரூபலை, டாலருக்கு பதிலாக சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்த இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ஆனால் ரூபலை பங்கு சந்தையில் புகுத்துவது மிகவும் சிரமம். ஆனால் டாலருக்கு எதிரான நடவடிக்கையில், இது முக்கிய கட்டமாக இருக்கும் என்று ரஷ்யா முடிவெடுத்துள்ளது.

    கூட்டு

    கூட்டு

    இந்த மூன்று நாடுகளின் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இதுவரை பெரும்பாலான உலக நாடுகள் எல்லாம் அமெரிக்க டாலரில்தான் பொருட்களை வாங்கி வந்தது. தற்போது அதற்கு எதிராக மூன்று பெரிய நாடுகள் களம் குதித்து உள்ளது. இது அமெரிக்காவிற்கு பெரிய அடியாக இருக்க வாய்ப்புள்ளது. அடுத்து என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

    English summary
    Dollar VS Rest: After India, Now Russia and UK may switch into their own currency for global marketing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X