நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தொட கூடாது.. சைபர் அட்டாக்" முதல் மீட்டிங்கிலேயே புடினுக்கு பிடன் சைலன்ட் வார்னிங்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் பிடனுக்கும் ரஷ்ய அதிபர் புடினுக்கும் இடையில் நேற்று நடந்த மீட்டிங் மிகவும் சுமுகமாக சென்று இருந்த போதிலும், அமெரிக்காவில் நடக்கும் சைபர் தாக்குதல்கள் குறித்து புடினிடம் பிடன் ஸ்டிரிக்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஜி7 மாநாட்டை தொடர்ந்து நேற்று அமெரிக்க அதிபர் பிடன் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையே லேக் ஜெனிவா பகுதியில் சந்திப்பு நடந்தது. அமெரிக்க அதிபராக பிடன் பதவி ஏற்றதில் இருந்தே இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை.

முக்கியமாக புடினை "கில்லர்" என்று பிடன் வெளிப்படையாக அழைத்ததும், அமெரிக்காவில் அடுத்தடுத்து சைபர் அட்டாக் நடத்தப்பட்டதும் இரண்டு நாட்டு உறவை பாதித்தது. இதையடுத்து இரண்டு நாடுகளும் தங்களின் தூதர்களை திரும்ப பெற்றது

சைபர் பாதுகாப்பு துறையில் வெளிநாடுகளில் கொட்டி கிடக்கும் வேலைகள்.. ஒரு கோர்ஸை முடித்தால் போதும்சைபர் பாதுகாப்பு துறையில் வெளிநாடுகளில் கொட்டி கிடக்கும் வேலைகள்.. ஒரு கோர்ஸை முடித்தால் போதும்

தூதர்

தூதர்

இப்படிப்பட்ட நிலையில் நேற்று நடந்த மீட்டிங் மூலம் இரண்டு நாடுகளுக்கு இடையிலான கசப்புகள் சரி செய்யப்பட்டன. கிட்டத்தட்ட அணு ஆயுத பாதுகாப்பு தொடங்கி ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்தப்படும் விதம் வரை அனைத்தும் இதில் விவாதிக்கப்பட்டு உள்ளன. இந்த மீட்டிங் நன்றாக சென்ற நிலையில் இரண்டு நாடுகளும் மீண்டும் தூதர்களை பரிமாறிக்கொள்ளும் முடிவு சுமுகமாக எடுக்கப்பட்டது .

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த மீட்டிங் நன்றாக சென்றாலும் சில கசப்பான விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. முக்கியமாக, ரஷ்யாவில் எதிர்க்கட்சியினர் நடத்தப்படும் விதத்தை பிடன் விமர்சித்தார். முக்கியமாக நாவல்னி நடத்தப்படும் விதம் குறித்தும் பிடன் விமர்சனம் செய்தார். அதேசமயம் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் நடத்தப்படும் விதத்தை புடின் விமர்சனம் செய்து பதிலடி கொடுத்தார்.

அணு ஒப்பந்தம்

அணு ஒப்பந்தம்

இந்த மீட்டிங்கில் மிக முக்கியமான விஷயம் என்றால் அது அணு ஆயுத ஒப்பந்தம்தான். இரண்டு நாடுகளும் அணு ஆயுத ஒப்பந்தமான ஸ்டார்ட் என்ற ஒப்பந்தத்தை பனிப்போருக்கு பின் மேற்கொண்டது. இதற்கு பதிலாக புதிய அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளும் அல்லது பழைய ஒப்பந்தத்தை அப்டேட் செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகள் இனி நடக்கும்.

இல்லை

இல்லை

இதில் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் யாருக்கும் எச்சரிக்கை விடுக்கவில்லை என்றாலும் கூட, பிடன் ரகசியமாக சில எச்சரிக்கைகளை புடினுக்கு விட்டு இருக்கிறார். ரஷ்யா வலுவாக இல்லை. ரஷ்யா இன்னொரு பனிப்போரை கண்டிப்பாக விரும்பாது என்று பிடன் விமர்சனம் செய்துள்ளார். அதேபோல் ரஷ்யாவின் சைபர் தாக்குதல்களுக்கு எதிராகவும் பிடன் பேசினார்.

16 விஷயங்கள்

16 விஷயங்கள்

அமெரிக்காவின் கட்டமைப்பிற்கு 16 விஷயங்கள் முக்கியம் (அந்த லிஸ்டை பிடன் குறிப்பிடவில்லை). அதில், சைபர் பாதுகாப்பும் ஒன்று. இதில் எந்த விதமான அத்துமீறல்களையும் நாங்கள் விரும்ப மாட்டோம். சைபர் தாக்குதல்களுக்கு எங்களின் பதிலும் சைபர் தாக்குதலாக இருக்கும் என்று பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு புடின், உலகிலேயே அதிக சைபர் தாக்குதலை நடத்தும் நாடு நாங்கள் இல்லை.

நீங்கள்தான்

நீங்கள்தான்

நீங்கள்தான் உலகிலேயே அதிக சைபர் தாக்குதலை நடத்தும் நாடு என்று புடின் பதிலடி கொடுத்துள்ளார். இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீட்டிங் சுமுகமாக சென்றாலும், சைபர் தாக்குதல்கள் குறித்தும் மட்டும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவி வருகிறது. நேற்று நடந்த மீட்டிங்கில் பிடன் லேசாக எச்சரிக்கை விடுத்த நிலையில் இந்த மோதல் முடிவிற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Don't touch that: Biden draws a red line on Cyber attack against Putin in yesterday meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X