நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"செகண்ட் வேவ்" வந்தாலும் சரி.. நாட்டை இனியும் லாக்டவுனில் போட்டு மூட மாட்டேன்.. டிரம்ப் பிடிவாதம்

2வது அலை வந்தாலும் முடக்கம் என்பது இல்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

நியூயார்க்: 2வது வேவ் வந்தாலும் சரி, நாட்டை முடக்க போவது கிடையாது.. மூடி போட்டு மூடுவதற்காக ஒரு நாடு இல்லை.. இப்படி நிரந்தரமாக பூட்டி போடுவதும் ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது கிடையாது.. அதனால் வைரஸ் பாதிப்பில் 2வது அலை வந்தாலும் சரி, முடக்கம் என்பதே கிடையாது என்று அதிபர் டிரம்ப் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக கூறியுள்ளார்.. இந்த பரபரப்பு பேச்சு மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுக்க வைரஸின் பிடியில் சிக்கி கொண்டுள்ளது.. இந்த கொரோனா பாதிப்பில் லீடிங்கில் உள்ளது அமெரிக்காதான்.. உயிரிழப்பிலும் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது.

வைரஸ் பரவலை தடுக்க லாக்டவுன் நாடுகளில் பிறப்பிக்கப்பட்டது... இதனால் தொழில், வர்த்தகம் முடங்கியது... பொருளாதாரம் அதல பாதாளத்தில் தொங்க ஆரம்பித்துவிட்டது.. லட்சக்கணக்கான பேருக்கு வேலை இல்லை.. யார் கையிலும் காசு இல்லை!!

திருப்பதி டிக்கெட் முன்பதிவு.. இன்று முதல் புதிய இணையதள முகவரி மாற்றம்திருப்பதி டிக்கெட் முன்பதிவு.. இன்று முதல் புதிய இணையதள முகவரி மாற்றம்

மாகாணங்கள்

மாகாணங்கள்

இதனால் அந்தந்த நாடுகளும் தங்கள் நாட்டின் சீர்குலைந்து போயுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.. அந்த வகையில் அங்குள்ள 50 மாகாணங்களிலும் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.. சரியான முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் கட்டுப்பாடுகளை தளர்த்தும் இடங்களில் 2-வது அலை நோய்த்தொற்று ஏற்படும் என்று ஒரு ஆய்வும் எச்சரித்தது.

டிரம்ப்

டிரம்ப்

இதை பற்றிதான் டிரம்ப்பிடம் ஒரு கேள்வி எழுப்பட்டது.. நேற்றுமுன்தினம் மிச்சிகன் மாகாணத்துக்கு டிரம்ப் சென்றிருக்கிறார்.. அங்கிருக்கும் ஃபோர்டு கார் உற்பத்தி ஃபேக்டரியை அவர் பார்வையிட்டார்.. அப்போது செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்.. அவரிடம் "கொரோனாவைரஸ் தொற்றின் 2-வது அலை வீசும் என்று சொல்கிறார்களே.. அதை பற்றி நீங்கள் கவலைப்படறீங்களா?" என்று கேட்டனர்.

முடக்கம் இல்லை

முடக்கம் இல்லை

அதற்கு டிரம்ப், "இல்லை.. 2-வது அலை வீசினால் நாட்டை முடக்கி போட முடியாது. நாங்கள் கொரோனா தீயை அணைக்க போகிறோம்... ஆனால், நாட்டை முடக்கப்போவது இல்லை. இப்படி நிரந்தரமாக பூட்டிப்போடுவதும் ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது கிடையாது.. முடிவுறாத முடக்கம் என்பது பொது சுகாதாரத்துக்கு பேரழிவாகத்தான் அமையும்... மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நமது பொருளாதாரம், செயல்படும் பொருளாதாரமாக இருக்க வேண்டும்" என்றார்.

பரபரப்பு

பரபரப்பு

அமெரிக்காவில் இதுவரை 16 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது.... 96 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை கொரோனா காவு வாங்கி உள்ளது.. இந்நிலையில், திரும்பவும் 2-வது வேவ் வந்தால், நாட்டை முடக்கப்போவது இல்லை என்று டிரம்ப் சொல்லி இருப்பது பரபரப்பை தந்து வருகிறது.

English summary
donald trump: trump says about second wave of coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X