நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிக துணிச்சலான முடிவு.. டிவிட்டரில் இனி அரசியல் விளம்பரம் வராது.. ஜாக் முடிவு.. ஏன் தெரியுமா?

இனி டிவிட்டர் தளத்தில் அரசியல் விளம்பரங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்று டிவிட்டர் நிறுவனர் ஜாக் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: இனி டிவிட்டர் தளத்தில் அரசியல் விளம்பரங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்று டிவிட்டர் நிறுவனர் ஜாக் தெரிவித்துள்ளார்.

2014 லோக்சபா தேர்தலின் போது இந்தியா முழுக்க சமூக வலைத்தளங்களில் பாஜக மிக வேகமாக வளர்ந்தது. அப்போதுதான் குஜராத் மாடல் என்ற பெயர் நாடு முழுக்க பரவியது. இது தொடர்பான கட்டுரைகள் சமூக வலைத்தளங்களில் தினமும் வெளியானது.

அதேபோல் அமெரிக்காவில் 2016ல் அதிபர் தேர்தலின் போது டிரம்ப் குறித்த கட்டுரைகள் நிறைய வெளியானது. டிரம்ப் எவ்வளவு திறமை வாய்ந்தவர் என்று கட்டுரைகள் பேஸ்புக் மூலமும், டிவிட்டர் மூலமும் வைரலாக பரவியது.

உயரும் கடல்மட்டம்.. 2050 ஆம் ஆண்டு சென்னை மூழ்கும் அபாயம்?.. அமெரிக்க ஆய்வறிக்கையில் பகீர் தகவல்உயரும் கடல்மட்டம்.. 2050 ஆம் ஆண்டு சென்னை மூழ்கும் அபாயம்?.. அமெரிக்க ஆய்வறிக்கையில் பகீர் தகவல்

எப்படி

எப்படி

இது மட்டுமின்றி பேஸ்புக் டிரம்பிற்கு ஆதரவாக அரசியல் ரீதியாக நிறைய விளம்பரங்கள் செய்தது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டு, மக்களின் மனதை மாற்றும் வகையில் இந்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. இது டிரம்பிற்கு தேர்தலின் போது உதவியதாக பெரிய குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு பின் ரஷ்யா இருப்பதாகவும் பெரிய புகார் உள்ளது.

பேஸ்புக் இப்போது

பேஸ்புக் இப்போது

இந்த புகாரில் சிக்கி சில மாதங்கள் முன் பேஸ்புக் பெரிய பிரச்சனைகளை சந்தித்தது. ஆனால் இப்போதும் கூட பேஸ்புக் தன்னுடைய விளம்பரம் தொடர்பான கொள்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை. அதிலும் அரசியல் விளம்பரங்கள் தொடர்பான கொள்கைகளை பேஸ்புக் இன்னும் மாற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மார்க் - ஜாக்

மார்க் - ஜாக்

மார்க் ஜுக்கர்பெர்க்தான் மாற்றவே மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார் என்பதால் தற்போது ஜாக் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆம் டிவிட்டர் நிறுவனர் ஜாக் தற்போது மிக துணிச்சலாக டிவிட்டரில் இனி அரசியல் சார்ந்த விளம்பரம் எதுவும் வராது என்று கூறிவிட்டார். இன்று காலை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அரசியல் விளம்பரம்

ஆம் இனி நீங்கள் டிவிட்டரில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை, ஸ்பான்சர்ட் லிங்குகளை பார்க்க முடியாது. அரசியல் என்பது விளம்பரம் மூலம் வரக்கூடியது கிடையாது. அரசியல் புகழை காசு கொடுத்து வாங்க கூடாது, அது தானாக வர வேண்டும், என்று ஜாக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தேர்தல் வருகிறது

தேர்தல் வருகிறது

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் வர உள்ள நிலையில் தற்போது ஜாக் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதை அமெரிக்க எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் வரவேற்று இருக்கிறார்கள். பேஸ்புக் நிறுவனம் இதேபோல் முடிவை எடுக்குமா என்று கேள்விகள் எழ தொடங்கி உள்ளது.

பிரச்சாரம்

பிரச்சாரம்

சமூக வலைத்தளங்களையும், அதன் புள்ளிகளையும் அதிகம் நம்பி இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இதனால் அதிகம் பாதிக்கும் என்று கூறுகிறார்கள். அதேபோல் டிவிட்டர் இந்த அறிவிப்பை தொடர்ந்து பெரிய அளவில் ஒரே நாளில் இழப்பை சந்தித்து இருக்கிறது. 1%க்கும் அதிகமாக டிவிட்டர் பங்கு சந்தையில் இதனால் இழந்துள்ளது.

English summary
Earn in, Don't buy it: Founder Jack tweets after banning political ads from Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X