நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அலாஸ்காவின் நகரங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை ரத்து

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்காவின் தெற்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் பாதிப்பு இல்லாததால் அங்கு விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்க புவியியல் கணக்கெடுப்பின்படி, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 10:12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது பெர்ரிவில்லே என்ற நகரத்தின் தென்கிழக்கு திசையில் 105 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 28 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

earthquake hits off Alaskan coast, but tsunami warning cancelled

எனினும் அலாஸ்காவின் டெம்ப்ளர் நகரில் நிலநடுக்கம் உணரப்படவில்லை என்று அம்மாநில நில அதிர்வு நிபுணர் மைக்கேல் வெஸ்ட் கூறினார்.

ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய நகரங்களில் வசிப்பவர்கள் மிகவும் வலுவான நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளார்கள். ஏங்கரேஜ் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று நில அதிர்வு நிபுணர் மைக்கேல் வெஸ்ட் கூறினார்.

நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதாக அறிக்கைகள் எதுவும் வரவில்லை. மக்கள் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. எனினும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் கடலோர குடியிருப்பாளர்களை சேர்ந்த மக்கள் உயரமான இடத்திற்கு இடம் பெயர்ந்தனர். கோடியக் தீவில், உள்ளூர் உயர்நிலைப் பள்ளி மற்றும் சர்ச்சுகளில் வெளியேற்றப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இதனிடையே பாதிப்புகள் இல்லாததால் சுனாமி எச்சரிக்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது.

ஓபிசி இட ஒதுக்கீடு.. இதைப் பற்றியெல்லாம் கருத்தே இல்லையா.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர் கேள்வி!ஓபிசி இட ஒதுக்கீடு.. இதைப் பற்றியெல்லாம் கருத்தே இல்லையா.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர் கேள்வி!

அலாஸ்கா தீபகற்பம் பசுபிக் பெருங்கடலை ஒட்டிய பகுதியாகும். இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். அலாஸ்கா தீபகற்பத்தில் 1964 ம் ஆண்டு மார்ச் மாதம் 9.2 என்கிற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இது வட அமெரிக்காவில் இதுவரை இந்த அளவிற்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது இல்லை. இந்த நிலநடுக்கம் ஏங்கரேஜ் பகுதியை பேரழிவிற்கு உட்படுத்தி, சுனாமியை உருவாக்கி, அலாஸ்கா வளைகுடா, அமெரிக்க மேற்கு கடற்கரை மற்றும் ஹவாய் ஆகியவற்றை துவம்சம் செய்தது.அந்த இயற்கை பேரழிவில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

English summary
An earthquake with a magnitude of at least 7.4 struck the Alaskan peninsula on Wednesday, the GFZ German Research Center for Geosciences said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X