நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப்ளூ கலர் ஸ்போர்ட்ஸ் ஷூ.. முகமெல்லாம் புன்னகை.. அமெரிக்க பஃபல்லோ பண்ணையில் அசத்திய எடப்பாடியார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்கவின் பஃபல்லோ பண்ணையில் அசத்திய எடப்பாடியார் | CM Edappadi Palanisamy Us Visit

    நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்குள்ள பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு நேரில் சென்று, ஆய்வு செய்து அசத்தியுள்ளார்.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். லண்டன் சென்றதுமே எடப்பாடி பழனிச்சாமி லுக் முற்றிலும் மாறிவிட்டது.

    கோட்-சூட் அணிந்து எடப்பாடி பழனிச்சாமி மாஸ் லுக்கில் காட்சியளித்தார். இது சமூக வலைத்தளம் முழுக்க பேசு பொருளாக மாறிவிட்டதை பார்க்க முடிந்தது.

    தமிழகத்தை தாக்க வருகிறது 'தாமரை புயல்'.. நித்தம் நித்தம் சிக்கும் தலைகள் எத்தனையோ?தமிழகத்தை தாக்க வருகிறது 'தாமரை புயல்'.. நித்தம் நித்தம் சிக்கும் தலைகள் எத்தனையோ?

    கோட் சூட்

    கோட் சூட்

    கோட் சூட் போட்டது, சரியா தப்பா என்ற வாதம் ஒரு பக்கம், அவர் உடை அவர் உரிமை என்ற வாதம் மறுபக்கம் என்றால், சூட் போட்ட எடப்பாடி பழனிச்சாமி, அசத்தலாக இருப்பதாக பாராட்டுகளும் வந்தன. தமிழகத்தை சேர்ந்த ஒரு முதல்வரை கோட் சூட்டில் பார்க்க புது அனுபவமாக இருந்தது என்பது மட்டும் நிச்சயம்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு, அமெரிக்கா சென்றுள்ளார், எடப்பாடி பழனிச்சாமி. இப்போதும் புது லுக்கில்தான் எடப்பாடி பழனிச்சாமி காட்சியளிக்கிறார். இன்று நியூயார்க்கிலுள்ள பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு நேரில் சென்று அங்கு செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து எடப்பாடி கே.பழனிசாமி நேரில் பார்வையிட்டு தொழில்நுட்பங்கள் பற்றி கேட்டறிந்தார்.

    ப்ளூ கலர் ஷூ

    ப்ளூ கலர் ஷூ

    அப்போது அவர் முழுக்கை கோட் அணியாமல், மேல் கோட் அணிந்துள்ளார். அதைவிட அவர் அணிந்துள்ள ப்ளூ கலர் ஸ்போர்ட்ஸ் ஷூ இன்னும் டாப். பசுக்கள், மழை, வெயில் படாமல் எப்படி கூரைக்குள் வைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது என்பதை முதல்வர் பார்வையிட்டார். தமிழகத்தில் அமையவுள்ள கால்நடைப் பூங்காவிற்கு தேவைப்படும் நவீன தொழில்நுட்பங்களை அறிய இந்த விசிட் என முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

    கன்றுக்குட்டி

    கன்றுகுட்டி ஒன்றை முதல்வர் தடவி குடுத்து ரசிக்க, கன்றுகுட்டியும், அதை அனுபவிக்க, சுற்றி நின்ற அதிகாரிகள் மத்தியில் பெரும் சிரிப்பலை எழுந்தது. விவசாயியின் மகன் என்று அடிக்கடி சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி, பசுவுடன் இயல்பாக பழகி அதை நிரூபித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இதுதொடர்பான வீடியோவை, முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

    English summary
    Tamilnadu CM Edappadi Palanisamy has visit Buffalo farm in New York with new look.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X