• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

8 மாத பச்சைக் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூர தந்தை.. என்ன செய்யலாம் இவரை?

|

நியூயார்க்: பெண்களுக்கு பாதுகாப்பற்ற உலகமாக மாறி வருகிறது. ஆங்காங்கே பலாத்கார சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பச்சிளம் பிள்ளைகள் முதல் மரணிக்கும் பெண்கள் வரை பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு டெல்லியில் 8 மாத பெண்குழந்தையை உறவுக்காரன் ஒருவனே பலாத்காரம் செய்தான். அந்த கொடூர சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது பெற்ற தந்தையே தனது 8 மாத பெண் குழந்தையை பலாத்கார செய்து கொன்று புதைத்திருக்கிறான். நியூயார்க்கில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கலியுகம் எப்படி இருக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஜீவநதிகள் கூட வரண்டு விடும். கணவன், மனைவி ஆகியோருக்கு ஒருவர் மீது மற்றவர்க்கான அக்கறை குறைந்து விடும்.

வயது முதிர்ந்தவர்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். பெற்றோர்களை பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்கள் சுமையாக கருதுவார்கள். பச்சிளம் பெண் பிள்ளைகளுக்குக் கூட பாதுகாப்பு இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

கொடூர தகப்பன்

கொடூர தகப்பன்

நியூயார்க் நகர போலீசார், சில தினங்களுக்கு மூன்பு காடி பிரான்சிஸ்கோவிக் என்ற 25 வயது இளைஞனை கைது செய்தனர். அவன்மீதான குற்றச்சாட்டை கேட்டு நீதிபதியே அதிர்ந்து போனார். 8 மாத பச்சிளம் பெண் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்று புதைத்தான் என்பதுதான்.

குழந்தையின் மரணம்

குழந்தையின் மரணம்

கொல்லப்பட்ட அந்த குழந்தையின் பெயர் ரூபி. பிஞ்சு குழந்தைக்கு பேச்சு கூட சரியாக வராது, அப்பா அம்மா என்ற உச்சரிப்பை தவிர எதுவும் அறியாது. அந்த குழந்தை போய் சீரழித்து கொன்று அருகில் இருந்த மயானத்தில் உள்ள கிணற்றில் வீசி விட்டான் அந்த கல்நெஞ்சக்கார தகப்பன்.

மிதந்த சடலம்

மிதந்த சடலம்

இந்த சம்பவம் நியூயார்க் நகர பேப்பரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளை கொன்ற குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் தியோகா கவுண்டியில் இருந்த மோட்டலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான் அவனை அள்ளிக்கொண்டு வந்தது போலீஸ். கிணற்றில் மிதந்து கொண்டிருந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

குற்றவாளிக்கு கடும் தண்டனை

குற்றவாளிக்கு கடும் தண்டனை

தியோகா டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவன்மீது பலாத்காரம், கொலை வழக்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிபதி எந்த கேள்வியுமே கேட்காமல் அவனுக்கு ஆயுள் தண்டனை தர வாய்ப்பு உள்ளது. ஜாமீனில் வெளிவரக்கூட முடியாத அளவிற்கு வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த கொடூரனுக்கு ஆதரவாக இரண்டு வக்கீல்கள் ஆஜராகியுள்ளனர் என்பதுதான் கொடூரத்தின் உச்சம்.

ரூபிக்கு அஞ்சலி

உயிரிழந்த குழந்தை ரூபி பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயானத்தில் மிகப்பெரிய அளவில் அஞ்சலி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அனைவரும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பச்சிளம் பிள்ளை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நியூயார்க் நகரத்தையே உலுக்கியுள்ளது. கருடபுராணத்தின் படி இந்த மாதிரி ஆட்களை எல்லாம் கும்பிபாகம் அந்தகூபம் செய்தால் கூட மனது ஆறாது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
A DAD has been accused of raping his eight month old daughter before killing her and dumping her body in a cemetery pond. Cody Franciscovich, 25, was naked when he was arrested after the girl's mother requested a welfare check, telling a dispatcher that he had left a New York motel with the girl on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more