நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி ரோடே கிடையாது.. சாலைக்கு அடியில் எலோன் மஸ்க் அமைத்த அதிசய பாதை.. 200 கிமீ வேகத்தில் போகலாம்!

சாலைக்கு அடியில் கார்களை ஓட்டி செல்லும் வகையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் அமெரிக்காவில் வித்தியாசமான சுரங்க பாதை ஒன்றை அமைத்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சாலைக்கு அடியில் எலோன் மஸ்க் அமைத்த பாதை, 200 கிமீ வேகத்தில் போகலாம்!-வீடியோ

    நியூயார்க்: சாலைக்கு அடியில் கார்களை ஓட்டி செல்லும் வகையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் அமெரிக்காவில் வித்தியாசமான சுரங்க பாதை ஒன்றை அமைத்து இருக்கிறார்.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் அடிக்கடி எதையாவது வித்தியாசமாக செய்து மக்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குவார். செவ்வாய் கிரகத்திற்கு காரை அனுப்புவது, தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்க சிறிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்குவது என்று வித்தியாச வித்தியாசமாக எதாவது செய்வார்.

    இந்த நிலையில்தான் இவர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் புதிதாக சுரங்க பாதையை அமைத்து உள்ளார். ஆனால் இது மற்ற சுரங்க பாதை போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமானது.

    என்ன சொன்னார்

    கடந்த 2016ம் வருடம் லாஸ் ஏஞ்சல்ஸில் போக்குவரத்து நெரிசல் மிக மோசமாக இருக்கிறது என்று எலோன் மஸ்க் குற்றச்சாட்டு வைத்தார். இதை தன்னுடைய ''தி போரிங் நிறுவனம்'' விரைவில் சரி செய்யும் என்றும் சபதம் செய்தார். அதன் அடிப்படையில்தான் தற்போது லாஸ் ஏஞ்சலஸில் சுரங்க பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    எப்படி நடக்கும்

    இந்த பாதைக்குள் கார்களை ஒரு தனி லிப்ட் மூலம் கொண்டு செல்ல வேண்டும். அதன்பின் இருக்கும் மேடை போன்ற பகுதியில் காரை நிறுத்தினால் போதும். அந்த மேடையே வேகமாக நகர்ந்து காரை, எந்த இடத்திற்கு செல்கிறோமோ அங்கு எடுத்து சென்றுவிடும். அதாவது நம்முடைய கார் ஒரு சுரங்க ரயில் போல மாறிவிடும்.

    பயன் என்ன

    இதன் மூலம் மேலே எவ்வளவு மோசமான போக்குவரத்து நெரிசல் நிலவினாலும், கீழே எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்ல முடியும். கார் கீழே எங்கேயும் நிற்க வேண்டியது கிடையாது. ஒரு மெட்ரோ சுரங்க பாதையில் கார் வேகமாக செல்ல முடியும் என்றால் எப்படி இருக்கும். அப்படித்தான் இந்த சாலை உருவாக்கப்பட்டு இருக்கிறது .

    சூப்பர் வேகம்

    இந்த சுரங்க பாதையில் ஒரே நேரத்தில் நிறைய கார் போகும் வகையிலும் அமைக்கப்படும் என்று எலோன் தெரிவித்துள்ளார். கார் இல்லாமல் பிற வாகனங்கள் செல்லும் வகையில் இதை உருவாக்க இருக்கிறார்கள். இதன் மூலம் சுரங்கத்திற்கு கீழே உள்ள மேடை, நமது காரை 200 கிமீ வேகத்திற்கு கூட அழைத்து செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    எப்போது வரும்

    இதன் கட்டுமானம் முடிந்து இன்று திறக்கப்பட உள்ளது. தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஹாத்ரோன் என்ற இடத்தில் 2 கிமீ பகுதிக்கு மட்டும் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. வரும் வருடங்களில் அமெரிக்கா முழுக்க இப்படி சுரங்கம் அமைக்க போவதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    English summary
    Elon Musk’s boring company made a bizarre tunnel road to fight traffic. The Boring Company will launch the road today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X