நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனுபவமே இல்லாத 4 பேரை.. விண்ணுக்கு அனுப்பிய "ஸ்பேஸ் எக்ஸ்".. 3 நாட்கள் பூமியை சுற்ற போகும் அதிசயம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக 4 பேரை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. நான்கு பேர் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் கேப்ஸ்யூல் அடுத்த 3 நாட்களுக்கு பூமியை சுற்றி வர உள்ளது.

உலகம் முழுக்க தற்போது விண்வெளி பயணம் மீதான விருப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. விண்வெளி பயணம் என்பது ஆராய்ச்சிக்காக என்பது தாண்டி தற்போது சுற்றுலா, செவ்வாய் கிரக குடியேற்றம் என்ற அளவிற்கு நீண்டு உள்ளது. வரும் காலத்தில் விண்வெளி சுற்றுலாவை பெரிய அளவில் நடத்த உலகின் பெரும் பணக்காரர்கள் இப்போதே களமிறங்கி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Recommended Video

    Space Trip-க்கு போட்டிபோடும் Billionaires.. எவ்வளவு செலவாகும்? | Explained

    விண்வெளி பயணத்தில் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ப்ளூ ஆர்ஜின் நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஜூலை மாதம் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் விண்கலம் மனிதர்களோடு வெற்றிகரமாக விண்ணுக்கு சென்றுவிட்டு பாதுகாப்பாக திரும்பியது. விர்ஜின் நிறுவன தலைவர் பிரிட்டிஷை சர் ரீச்சர்ட் பிரான்சன் தலைமையிலான குழு விண்ணுக்கு சென்றுவிட்டு சில நிமிடங்கள் அங்கேயே மிதந்துவிட்டு பின் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார்கள்.

    திடீர் விபத்து.. 540 டிகிரி கோணத்தில் நகர்ந்த சர்வதேச விண்வெளி நிலையம்.. பரபரப்பு தகவல்கள்! திடீர் விபத்து.. 540 டிகிரி கோணத்தில் நகர்ந்த சர்வதேச விண்வெளி நிலையம்.. பரபரப்பு தகவல்கள்!

    ப்ளூ ஆர்ஜின்

    விமான உதவியுடன் விண்ணுக்கு அருகில் சென்று, பின் அங்கிருந்து ராக்கெட் மூலம் விண்வெளி வட்டப்பாதைக்கு சென்று, அதன்பின் கிளைடர் உதவியுடன் பூமிக்கு இவர்கள் திரும்பினார்கள். அதன்பின் கடந்த ஜூலை மாதம் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் அதன் நிறுவனர் ஜெப் பெஸோஸ் முதல் ஸ்பேஸ் பயணத்தை மேற்கொண்டார். தனது முதல் ஸ்பேஸ் பயணத்தை 4 பேர் கொண்ட குழுவுடன் அவர் வெற்றிகரமாக மேற்கொண்டார். அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸ் பகுதியில் இருந்து ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 100 கிமீ உயரத்தில் நியூ ஷெப்பர்ட் கேப்ஸ்யூல் மிதந்துவிட்டு பூமிக்கு திரும்பியது.

    ஸ்பேஸ் எக்ஸ் விமானம்

    இந்த நிலையில்தான் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4 பேரை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பொதுவாக பெரிய விண்வெளி திட்டங்களுக்கு பல்கான் 9 ராக்கெட்டை பயன்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்று இரவு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. இன்ஸ்பிரேஷன் 4 (Inspiration4) மிஷன் என்று அழைக்கப்பட்ட இந்த திட்டத்தில் ராக்கெட்டின் முன் பகுதியில் நீண்ட கேப்ஸ்யூல் ஒன்று அமைந்து இருந்தது. இதில்தான் 4 பேர் கொண்ட குழு இருந்தது.

    பல்கான் 9

    புளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் 12 நிமிடத்தில் 500 கிமீ வரை சென்றுவிட்டு, கேப்ஸ்யூலை விண்ணுக்கு அனுப்பிவிட்டு பூமிக்கு திரும்பியது. இந்த பல்கான் வகை ராக்கெட்டுகள் விண்ணுக்கு சென்றுவிட்டு பின் மீண்டும் பூமிக்கு திரும்பும் திறன் கொண்டது. நேற்றும் இந்த கேப்ஸ்யூலை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பிவிட்டு பல்கான் 9 ராக்கெட் பூமிக்கு திரும்பியது. புளோரிடா அருகே உள்ள கடல் பகுதியில் இது தரையிறங்கியது.

    சுற்றும்

    இந்த கேப்ஸ்யூல் ஸ்பேஸ்ஷிப் 575 கிமீ தூரத்தில் பூமியை சுற்றி வரும். அதாவது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கிருந்து 100 கிமீ மேலே இது சுற்றும். மொத்தம் 3 நாட்கள் இந்த இன்ஸ்பிரேஷன் 4 பூமியை சுற்ற போகிறது. மூன்று நாட்கள் கழித்து புளோரிடாவில் இவர்கள் தரையிறங்க உள்ளனர். விண்வெளி சுற்றுலா பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக இந்த பயணம் பார்க்கப்படுகிறது. மொத்தம் ஒரு கோடீஸ்வரர் உட்பட 4 பேர் இதில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

    ஆட்டோமேட்டிக்

    ஜெராட் ஐசக்மேன் என்ற கோடீஸ்வரர், ஹெய்லி ஆர்ச்நாக்ஸ், சியான் ப்ரொடக்ர், கிறிஸ் செம்பரொஸ்கி ஆகிய 4 பேர் இதில் பயணம் செய்துள்ளனர். இவர்கள் கடந்த 6 மாதமாக இதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்கள். விண்வெளி பயணம் குறித்த ஆராய்ச்சி, மனித உடல் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது, பயண அனுபவம் எப்படி இருக்கிறது உள்ளிட்ட பல விஷயங்களை இவர்கள் இந்த பயணத்தில் ஆராய்ச்சி செய்வார்கள். ஆனால் இன்ஸ்பிரேஷன் 4 கேப்ஸ்யூலை அவர்கள் இயக்க மாட்டார்கள்.

    எப்படி இயங்கும்?

    இன்ஸ்பிரேஷன் 4 கேப்ஸ்யூல் தானாக இயங்க கூடியது. சில கட்டுப்பாட்டுகளை பூமியில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும். மற்றபடி இதை இயக்க வேண்டிய எந்த விதமான பணியும் இவர்களுக்கு கிடையாது. ஹெய்லி ஆர்ச்நாக்ஸ், சியான் ப்ரொடக்ர், கிறிஸ் செம்பரொஸ்கி ஆகிய 4 பேரும் விண்வெளியில் சாப்பிடுவது, தூங்குவது போன்ற அனுபவங்களை பெற போகிறார்கள். விண்வெளி சுற்றுலாவின் மிகப்பெரிய படிக்கல்லாக இது பார்க்கப்படுகிறது.

    யார் எல்லாம்?

    ஜெராட் ஐசக்மேன் என்று கோடீஸ்வரர் இதில் ஒரு பயணி. இவரின் தலைமையில்தான் கடினமான போட்டிகள் மூலம் மற்ற 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வைக்கப்பட்ட போட்டிகள் குறித்து நெட்பிளிக்ஸில் டாக்குமெண்டரி கூட ஒன்று வெளியாகி உள்ளது. இதில் கேன்சரில் இருந்து குணமடைந்த ஹெய்லி ஆர்ச்நாக்ஸ் என்ற 29 வயது பெண் இடம்பெற்றுள்ளார்.

    ஸ்பேஸ் எக்ஸ்

    அதோடு கிறிஸ் செம்பரொஸ்கி என்ற முன்னாள் அமெரிக்க ஏர் போர்ஸ் வீரர், சியான் ப்ரொடக்ர் என்ற 59 வயதான புவியியல் ஆராய்ச்சியாளர் இடம்பெற்றுள்ளார். இந்த ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்க இதில் இருந்து 200 மில்லியன் டாலர் தொண்டு செயின்ட் ஜூட்ஸ் குழந்தைகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்படும். இவர்கள் அடுத்த 3 நாட்கள் பூமியை சுற்றி வருவது குறித்த அப்டேட்களை தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Elon Musk's SpaceX Inspiration 4 successfully reached orbit: 4 no experienced members crew will revolve earth for 3 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X