நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லெவல் 5.. ஹாலிவுட்டில் நடக்கும் ஆச்சர்யத்தை நிஜத்தில் நிகழ்த்திய எலோன் மஸ்க்.. பின்னணியில் சீனா!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் தனது டெஸ்லா காரின் மூலம் நிகழ்த்திய மாபெரும் சாதனை ஒன்று இணையம் முழுக்க வரப்பேற்பை பெற்றுள்ளது. உலக அளவில் மக்களின் வாழ்க்கை முறையில் இந்த புதிய சாதனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.

ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தலைவராக இருக்கும் எலோன் மஸ்க்தான் தற்போது டெஸ்லா நிறுவனத்திற்கும் தலைவராக இருக்கிறார். இவரின் டெஸ்லா நிறுவனம் தற்போது அமெரிக்காவில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது.

தமிழக முதல்வர் பழனிசாமி கூட அமெரிக்கா சென்ற போது, இதன் தொழிற்சாலையில் சென்று பார்வையிட்டார். இந்த நிறுவனத்தின் டெஸ்லா கார்கள் பேட்டரி மூலம் இயங்க கூடியது ஆகும்.

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம்

எலோன் மஸ்க் தனது டெஸ்லா காரைத்தான் செவ்வாய் கிரகத்திற்கும் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டரி மூலம் இயங்க கூடிய இந்த கார் உலகின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த கார் முழுக்க முழுக்க தானியங்கி வகையில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. எலோன் மஸ்க் தற்போது தானியங்கி கார்கள் மீது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதுவரை எப்படி

இதுவரை எப்படி

இதுவரை உருவாக்கப்பட்ட டெஸ்லா கார்கள் எல்லாம் லெவல் 4 வகை தானியங்கி கார்கள் ஆகும். அதாவது இந்த கார்கள் 90% தானியங்கி முறையில் இயங்கும். கார்களில் எங்கே செல்ல வேண்டும் என்று கொடுத்துவிட்டால் போதும். அவ்வப்போது தேவைப்படும் நேரங்களில் காரை இயக்க வேண்டிய கட்டாயம் மட்டும் இருக்கும். மற்றபடி முக்கால்வாசி இந்த கார்கள் தானாக இயங்கும்.

மீதம் எப்படி

மீதம் எப்படி

இந்த லெவல் 4 கார்களில் ஸ்டியரிங் இருக்கும். பிரேக் இருக்கும். தேவைப்படும் நேரங்களில் மக்கள் இதை ஓட்டலாம். இந்த நிலையில் தற்போது டெஸ்லா கார்கள் லெவல் 5 தொழில்நுட்பத்தை அடைந்து உள்ளது. இந்த லெவல் என்பது முழுக்க முழுக்க தானியங்கி முறை மூலம் இயங்க கூடிய கார்கள் ஆகும். மொத்தமாக அனைத்து பணிகளையும் இந்த கார்களே செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டியரிங் இருக்காது

ஸ்டியரிங் இருக்காது

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இந்த கார்களில் ஸ்டியரிங் இருக்காது. பிரேக் கூட இருக்காது. ஒரே ஒரு கணினி ஏஐ ஸ்கிரீன் மட்டும் இருக்கும். முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பம் மூலம் இது இயங்க கூடியது. இப்படி ஒரு லெவல் தானியங்கி வாகனம் சாத்தியமே இல்லை, அது ஹாலிவுட் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று எல்லோரும் கூறிய நிலையில், தற்போது அதை டெஸ்லா நிறுவனம் சாத்தியப்படுத்தி உள்ளது.

சீனா பின்னணி

சீனா பின்னணி

இந்த நிலையில் டெஸ்லாவின் இந்த சாதனைக்கு பின் சீனர்கள் இருப்பதாக எலோன் தெரிவித்து இருக்கிறார். அவர் தெரிவித்துள்ள கருத்தில் லெவல் 5 டெஸ்லா டெஸ்டில் நாங்கள் வென்றுவிட்டோம். விரைவில் சாலையில் இதை சோதனைசெய்வோம். டெஸ்லாவில் சீன கிளை இந்த வெற்றியை பெற்றுள்ளது. சீனாவில் இருக்கும் ஊழியர்களுக்கு இதற்காக நன்றி தெரிவிக்கிறேன், என்று மஸ்க் கூறியுள்ளார்.

English summary
SpaceX's Elon Musk's Tesla car attains level 5 with Chinese help.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X