நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்பே முறிந்துவிட்டது.. பிடன் பதவி ஏற்கும் முன்பே தேவையின்றி சீண்டிய புடின்..ரஷ்யா vs அமெரிக்கா 2.0

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியாகி பிடன் இன்னும் பதவி ஏற்கவே இல்லை.. ஆனால் அதற்குள் பிடன் உடன் ரஷ்யா மோதல் போக்கை கடைபிடிக்க துவங்கி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வென்றுவிட்டார். வரும் ஜனவரி மாதம் ஜோ பிடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

பிடன் அதிபர் தேர்தலில் வென்றதற்கு உலகம் முழுக்க இருக்கும் நாடுகள் எல்லாம் வாழ்த்து தெரிவித்துவிட்டது. அமெரிக்காவை மாபெரும் எதிரியாக பார்க்கும் சீனா கூட.. அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம் என்று கூறி பிடனுக்கு ''சீனா மேட் சமாதன புறாவை'' அனுப்பிவிட்டது.

ஆனால்

ஆனால்

உலக நாடுகள் எல்லாம் பகையை மறந்து, குறைந்த பட்ச மரியாதைக்காகவாது பிடனை வாழ்த்தி உள்ளது. ஆனால் ரஷ்யா மட்டும் அதிபர் தேர்தலில் பிடன் வென்றதற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதெல்லாம் போக, இப்போது வாழ்த்து தெரிவிக்க முடியாது என்றும் ரஷ்ய அதிபர் புடின் வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளிவரட்டும்.தற்போது இருக்கும் சட்ட போராட்டங்கள் முடியட்டும். அதற்கு பின் வாழ்த்து சொல்கிறேன் என்று புடின் அறிவித்துவிட்டார். மேலோட்டமாக பார்த்தால் ரஷ்யா சொல்வதில் தவறு என்ன இருக்க முடியும் என்றுதான் நினைக்க தோன்றும். ஆனால் உண்மையில் ரஷ்யா.. அமெரிக்காவை மீண்டும் சீண்ட தொடங்கிவிட்டது என்று உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

 ரஷ்யா எப்படி

ரஷ்யா எப்படி

அமெரிக்கா - ரஷ்யா உறவு இனி நினைத்தபடி இருக்காது என்று கூறுகிறார்கள். பிடன் அதிபராக வருவதற்கு முன்பே அவர் ரஷ்யா உடன் மோதல் போக்கை கடைபிடித்தவர். அமெரிக்க துணை அதிபராக ஒபாமாவிற்கு கீழ் பிடன் இருந்த போதே, அவருக்கும் ரஷ்யாவிற்கு பெரிதாக செட்டாகவில்லை. இதெல்லாம் போக டிரம்ப்பிற்கு தேர்தலில் ரஷ்யா உதவியது என்றும் புடின் குற்றச்சாட்டு வைத்தார்.

முறைகேடு

முறைகேடு

2016 அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு புடின் உதவினார் என்று குற்றச்சாட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டை வைத்தவர்களில் பிடனும் ஒருவர். அப்படி இருக்கும் போது 2020 தேர்தலிலும் ரஷ்யா, டிரம்பிற்காக வேலை செய்கிறது என்று பிடன் குற்றச்சாட்டு வைத்தார். இதனால்தான் தற்போது பிடனுக்கு புடின் வாழ்த்து சொல்ல மறுக்கிறார் என்று கூறுகிறார்கள்.

எப்படி

எப்படி

இன்னொரு பக்கம் டிரம்ப் இருந்தால் ரஷ்யா எதை வேண்டுமானாலும் சாதிக்கும். ஆனால் பிடன் கொஞ்சம் ஸ்டிரிக்ட் நபர். பார்க்க அமைதியாக இருந்தால் ராணுவ நடவடிக்கைகளில் கொஞ்சம் வலிமையான நபர். இவரின் வருகையை புடின் விரும்பவில்லை என்கிறார்கள். அதோடு உடல்நலக்குறைவோடு இருக்கும் புடின்.. பிடன் வருகையை பார்த்து கொஞ்சம் பதற்றத்தில் உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

 முன்பே முறிந்துவிட்டது

முன்பே முறிந்துவிட்டது

இதனால்தான் அமெரிக்க ரஷ்ய உறவில் பாதிப்படைய எதுவும் இல்லை. இரண்டு நாட்டு உறவு ஏற்கனவே மோசமாக இருக்கிறது, எல்லாம் முன்பே முறிந்துவிட்டது என்று புடின் வெளிப்படையாக அறிவித்துள்ளார். சீனாவின் மீது அமெரிக்காவிற்கு இருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்யா பக்கம் இனி திரும்பும் என்கிறார்கள்.

2.0 மோதல்

2.0 மோதல்

ரஷ்யா - அமெரிக்க உறவில் இது 2.0 காலம். நாங்களும் இனி கேமில் இருப்போம், சர்வதேச அளவில் அமெரிடிக்காவின் குரல் அழுத்தமாக ஒலிக்கும் என்று பிடன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்த நிலையில்தான் தற்போது பிடனுக்கு வாழ்த்து தெரிவிக்க புடின் மறுத்துள்ளார். இதனால் இனி வரும் நாட்களில் இரண்டு நாட்டு உறவு எப்படி இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

English summary
Even before the new presidency, The fight between Russia and USA intensified to next level.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X