நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவை சாய்க்க திட்டம்.. இந்தியா மீது கவனத்தை திருப்பும் டிரம்ப்.. அமெரிக்காவால் அடிக்க போகும் லக்!

சீனாவில் இருக்கும் அமெரிக்காவின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா யோசித்து வருகிறது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: சீனாவில் இருக்கும் அமெரிக்காவின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா யோசித்து வருகிறது.

Recommended Video

    US Factories Coming To India | சீனாவை சாய்க்க அமெரிக்கா திட்டம்

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே கடந்த இரண்டு வருடமாக நடந்த வர்த்தக யுத்தம் சென்ற வருட இறுதியில்தான் முடிந்தது.

    ஆனால் இந்த கொரோனா வைரஸ் காரணமாக தற்போது மீண்டும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான சண்டை எழுந்துள்ளது. சீனாவை பொருளாதார ரீதியாக சாய்க்க அமெரிக்கா முயன்று வருகிறது.

    சீனாவின் வளர்ச்சி

    சீனாவின் வளர்ச்சி

    உலகம் முழுக்க கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்துள்ளது. ஆனால் சீனா கொரோனாவால் இருந்து மீண்டு வந்து தற்போது உலகம் முழுக்க மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால் சீனாவின் பொருளாதாரம், ஏற்றுமதி துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உலகம் முழுக்க நொடிந்து போய் இருக்கும் நிலையை சரியாக சீனா பயன்படுத்திக் கொண்டு ஏற்றுமதியை பெருக்கி உள்ளது.

    சீனாவின் அசுர வளர்ச்சி

    சீனாவின் அசுர வளர்ச்சி

    கடந்த 10 வருடங்களாக உற்பத்தி துறை மற்றும் ஏற்றுமதி துறையில் சீனா வேகமாக முன்னேறி வந்தது. கடந்த 2010ல் சீனா உலகின் நம்பர் 1 உற்பத்தி நாடு என்ற பட்டத்தை பெற்றது . அதோடு உலகின் 32% உற்பத்தி தற்போது சீனாவில் இருந்துதான் வருகிறது. அமெரிக்காவை இது பல வருடங்களாக உறுத்தி வந்தது. சீனா தற்போது கொரோனா காரணமாக மேலும் வளர்ந்துள்ளது.

    வெளியேற்ற அமெரிக்கா முடிவு

    வெளியேற்ற அமெரிக்கா முடிவு

    இந்த நிலையில் கொரோனாவை பயன்படுத்தி சீனாவை தண்டிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.அதன்படி சீனாவில் இருக்கும் அமெரிக்கா நிறுவனங்கள் அனைத்தையும் இந்த வருட இறுதிக்குள் வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மொத்தமாக சீனாவில் இருந்து இந்த உற்பத்தி நிறுவனங்களை வெளியேற்றிவிட்டு, வேறு நாடுகளில் அதன் உற்பத்தி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    வரி விதிப்பு

    வரி விதிப்பு

    இதற்கு ஏதுவாக சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க ஆலோசனை செய்து வருகிறது. ஏற்கனவே இருக்கும் 25% வரி போக கூடுதல் வரி விதிக்க முடிவு செய்துள்ளார். அதோடு தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா, பிரான்ஸ் ஆகிய நட்பு நாடுகளையும் சீனாவிற்கு எதிராக வரி விதிக்க வைக்க அழுத்தம் தர இருக்கிறார்.

    அண்டை நாடுகளுக்கு செல்ல திட்டம்

    அண்டை நாடுகளுக்கு செல்ல திட்டம்

    இப்படி இறக்குமதி வரியை உயர்த்துவதன் மூலம் சீனாவில் இருந்து தானாக நிறுவனங்களை வெளியேற வைக்கலாம் என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது. சீனாவில் இருந்து வெளிவரும் நிறுவனங்களை அண்டை நாடுகளுக்கு கொண்டு செல்ல அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்தியா, தைவான் , திபெத், தென்கொரியா , ஆஸ்திரேலியா , லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகிய நட்பு நாடுகளுக்கு இந்த நிறுவனங்களை கொண்டு செல்ல அமெரிக்கா யோசித்து வருகிறது.

    இந்தியா மீது கவனம்

    இந்தியா மீது கவனம்

    சீனாவில் இந்த நிறுவனங்களை அமைக்க காரணம் அங்கு இருக்கும் மக்கள் சக்திதான். இதனால் அதே அளவு மக்கள் சக்தி கொண்ட இந்தியாவிற்கு இந்த நிறுவனங்களை கொண்டு செல்ல அமெரிக்க யோசித்து வருகிறது. இந்தியா எப்போதும் முதலீடு செய்ய ஏற்ற நாடு என்பதால் சீனாவில் இருக்கும் பேஸ்புக், ஆப்பிள், மைக்ரோசாப்ட், டெஸ்லா உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா பக்கம் தங்கள் கவனத்தை திருப்ப முடிவு செய்துள்ளது. சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் இவர்கள் கடை போட வாய்ப்புள்ளது.

    இந்தியாவிற்கு லக்

    இந்தியாவிற்கு லக்

    அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இந்தியா மிக நெருக்கம். சீனாவிற்கு எதிராக இந்தியாவை வளர்ந்துவிட்டால் நல்லது என்று அமெரிக்கா நினைக்கிறது. இந்தியா வளர்ந்தால்தான் ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க முடியும். சீனாவை கட்டுப்படுத்த முடியும் என்று டிரம்ப் நினைக்கிறார். இதனால்தான் அவர் இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    டிரம்பிற்கு முக்கியம்

    டிரம்பிற்கு முக்கியம்

    அதேபோல் இன்னொரு பக்கம் டிரம்பிற்கு இதில் இன்னொரு சுயநலமும் இருக்கிறது. அதன்படி இப்போது சீனாவை தண்டித்து ஒரு பொது எதிரியை அமெரிக்காவிற்கு எதிராக உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப் இருக்கிறார். சீனா மீது பழியை போட்டு இந்த வருட அதிபர் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். சீனாவை தண்டித்து அதை சொல்லியே அதிபர் தேர்தலில் வாக்கு கேட்க டிரம்ப் யோசிப்பார் என்கிறார்கள்.

    English summary
    Eyes on India as the USA plans to move its factories away from China amid Coronavirus fight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X