நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விதிகளை மீறும் அரசியல் போஸ்ட்கள் மீது இனி "வார்னிங் - லேபிள்".. பேஸ்புக் மார்க் அதிரடி.. பின்னணி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: பேஸ்புக்கில் அரசியல் ரீதியாக அரசியல் தலைவர்கள் போடும் சர்ச்சைக்குரிய போஸ்ட்கள் மீது வார்னிங் லேபிள் எனப்படும் எச்சரிக்கை குறியீடு ஒன்று போடப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

பேஸ்புக் மீது பல காலமாக கடுமையான ஒரு புகார் நிறைய வைக்கப்பட்டு வருகிறது. அதாவது பேஸ்புக் அரசியல் ரீதியான வெறுப்பு பேச்சுக்களை, பொய்யான தகவல்களை கண்டுகொள்வது இல்லை. அந்த போஸ்டுகள் மீது பேஸ்புக் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று புகார் உள்ளது.

பொய்யான, சர்ச்சைக்குரிய போஸ்ட்கள் மீது டிவிட்டர் உடனடியாக நடவடிக்கை எடுப்பது போல பேஸ்புக் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று புகார் உள்ளது. தற்போது இதுவே பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக மாறியுள்ளது.

பேஸ்புக்கிற்கு எதிராக குதித்த 100 கார்ப்பரேட் நிறுவனங்கள்.. ரூ.4 லட்சம் கோடி இழப்பு.. என்ன நடந்தது? பேஸ்புக்கிற்கு எதிராக குதித்த 100 கார்ப்பரேட் நிறுவனங்கள்.. ரூ.4 லட்சம் கோடி இழப்பு.. என்ன நடந்தது?

என்ன நடந்தது

என்ன நடந்தது

முக்கியமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் போடும் சர்ச்சைக்குரிய போஸ்ட் எதையும் பேஸ்புக் நீக்கியது இல்லை . ஆனால் டிவிட்டரோ டிரம்ப் சர்ச்சையாக சொல்லும் விஷயங்களை நீக்கி உள்ளது.,அல்லது அதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்று டிவிட் மீது வார்னிங் குறியீடு ஒன்றை கொடுத்துள்ளது. ஜார்ஜ் பிளாய்டு குறித்து டிரம்பில் டிவிட் ஒன்றை கூட டிவிட்டர் நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் இப்படிப்பட்ட போஸ்ட்களை பேஸ்புக் எப்போதும் நீக்கியது இல்லை. அரசியல்வாதிகள் சொல்வதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அதை நீக்க முடியாது என்று பேஸ்புக் இத்தனை நாளாக தெரிவித்து வந்தது. இதனால் கோபம் அடைந்த பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் பேஸ்புக்கில் இனி ஒரு மாதத்திற்கு விளம்பரம் செய்ய மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு 4.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

விதிகளை மாற்றம்

விதிகளை மாற்றம்

பேஸ்புக்கில் இனி விளம்பரம் செய்ய மாட்டோம் என்று கோலா, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் சொன்ன நிலையில் இப்படி அந்த நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சரிவை தொடர்ந்து பேஸ்புக் தனது விதியை மொத்தமாக மாற்றியுள்ளது. அதன்படி பேஸ்புக்கில் அரசியல் ரீதியாக அரசியல் தலைவர்கள் போடும் சர்ச்சைக்குரிய போஸ்ட்கள் மீது வார்னிங் லேபிள் எனப்படும் எச்சரிக்கை குறியீடு ஒன்று போடப்படும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Recommended Video

    யாருக்கு அதிக FOLLOWERS | SOCIAL MEDIA CELEBRITIES | Oneindia Tamil
    என்ன வார்னிங்

    என்ன வார்னிங்

    அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான அனைத்து போஸ்டுகளையும் இப்படி லேபிள் செய்ய போவதாக பேஸ்புக் அறிவித்து இருக்கிறது. அதிபர் டிரம்பின் போஸ்டுகளும் இதில் அடக்கம். அதன்படி பேஸ்புக் விதிகளை மீறி பொய்யான அரசியல் போஸ்ட், அதிபர் தேர்தல் குறித்த தவறான போஸ்ட், மக்களை திசை திருப்பும் பொய்யான போஸ்ட், வெறுப்பை உமிழும் போஸ்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த போஸ்ட்கள் முக்கியமான போஸ்ட்கள் என்றால் அதை நீக்காமல், வெறும் விதிகளை மீறும் போஸ்ட் என்று வார்னிங் லேபிள் மட்டும் இடப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

    English summary
    Facebook changes the rule, will put a flag on hate speech and violent political post after losing Rs. 4.2 Lakh Crores.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X