நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேஸ்புக்கிற்கு எதிராக குதித்த 100 கார்ப்பரேட் நிறுவனங்கள்.. ரூ.4 லட்சம் கோடி இழப்பு.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகின் பெரும் நிறுவனங்கள் பல பேஸ்புக்கிற்கு எதிராக பொங்கி எழுந்த காரணத்தால் தற்போது அந்த நிறுவனம் 4.2 லட்சம் கோடி ரூபாயை இழந்து இருக்கிறது.

Recommended Video

    Facebook loss : பேஸ்புக்கிற்கு எதிராக குதித்த 100 கார்ப்பரேட் நிறுவனங்கள்

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால் மக்களின் கவனம் முழுக்க பேஸ்புக் பக்கம் திரும்பி உள்ளது. கடந்த அதிபர் தேர்தலில் பேஸ்புக் மூலம் தேர்தல் முறைகேடு செய்ததாக அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் மீது புகார் உள்ளது.

    இதனால் இந்த முறை அவர் எவ்வளவு கண்டிப்புடன் செயல்படுகிறார். அரசியல் ரீதியான போஸ்ட்களை எப்படி கையாள்கிறார் என்று எல்லோரும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளனர்.

     "கஸ்டடி டெத்" கண்டிக்கத்தக்கது.. எச்.ராஜா ட்வீட்.. "4 நாளா எங்க போயிருந்தீங்க".. நெட்டிசன்கள் கேள்வி

    என்ன எதிர்ப்பு

    என்ன எதிர்ப்பு

    இந்த நிலையில்தான் பேஸ்புக்கிற்கு எதிராக 100 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் களமிறங்கி உள்ளது. அதன்படி பேஸ்புக்கில் இனி விளம்பரம் செய்ய போவதில்லை என்று கோகோ கோலா, ஹெர்சே, ஹோண்டா ஆகிய முக்கியமான நிறுவனங்கள் அறிவித்து உள்ளது. முதலில் யூனிலீவர் நிறுவனர்தான் பேஸ்புக்கில் விளம்பரம் செய்ய மாட்டோம் என்று அறிவித்தது. அதை தொடர்ந்து தற்போது வரை 100 நிறுவனங்கள் பேஸ்புக்கில் இனி விளம்பரம் செய்ய போவதில்லை என அறிவித்துள்ளது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    இதற்கு இந்த நிறுவனங்கள் சொல்லும் காரணம் மிக எளிமையானது. பேஸ்புக் வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்துவது இல்லை. பொய்யான தகவல்களை பேஸ்புக் கட்டுப்படுத்த தவறிவிட்டது. வன்முறைகளை தூண்டும் வகையில் போடப்படும் பேஸ்புக் போஸ்டுகளுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் வைத்து உள்ளனர். இதுதான் பெரு நிறுவனங்களின் இந்த முடிவிற்கு காரணம்.

    பல நாள் முடிவு

    பல நாள் முடிவு

    பல நாளாக பேஸ்புக்கிற்கு எதிராக இந்த புகார் வைக்கப்பட்டு வந்தது. அதிலும் அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொலையின் போது கூட இந்த புகார் வைக்கப்பட்டது. பேஸ்புக் உண்மையான செய்திகளை டெலிட் செய்கிறது . அரசின் வன்முறையை தூண்டும் செய்திகளை பரப்புகிறது என்று புகார் வைக்கப்பட்டது. தற்போது இந்த பிரச்சனை பெரிதாகி பேஸ்புக்கில் இருந்து பெரு நிறுவனங்கள் விளம்பரங்களை திரும்ப பெறும் அளவிற்கு நிலைமை போய் இருக்கிறது.

    பெரும் இழப்பு

    பெரும் இழப்பு

    இதனால் தற்போது பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி பெரிய நிறுவனங்களை விளம்பரங்களை வாபஸ் வாங்கியதால் பேஸ்புக்கின் பங்குகள் 8.3% சரிந்தது. இதனால் பேஸ்புக்கிற்கு 4.2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் 54 ஆயிரம் கோடி ரூபாயை இழந்து இருக்கிறார். அதேபோல் Bloomberg Billionaires Index பட்டியலில் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற பட்டியலில் இருந்து சரிந்து நான்காம் இடத்திற்கு சென்றுள்ளார் மார்க்.

    புதிய முடிவு

    புதிய முடிவு

    இதையடுத்து பேஸ்புக்கில் முக்கியமான முடிவு ஒன்றை மார்க் எடுத்துள்ளார். அதன்படி இனி வரும் நாட்களில் வெறுப்பு பேச்சுக்கள், சர்ச்சை கருத்துக்களுக்கு மேல் ஒரு வார்னிங் குறியீடு இருக்கும் என்று கூறியுள்ளார். ஒரு கொடி (flag) வார்னிங் குறியீடு இருக்கும். இதை பார்த்து அந்த போஸ்டை படிப்பதா அல்லது ரிப்போர்ட் அடிப்பதா என்பதை மக்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று மார்க் அறிவித்து இருக்கிறார் .

    தேர்தல் போஸ்ட்

    தேர்தல் போஸ்ட்

    அதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான அனைத்து போஸ்டுகளையும் இப்படி லேபிள் செய்ய போவதாக பேஸ்புக் அறிவித்து இருக்கிறது. அதிபர் டிரம்பின் போஸ்டுகளும் இதில் அடக்கம். இந்த போஸ்ட்கள் முக்கியமான போஸ்ட்கள் என்றால் அதை நீக்காமல், வெறும் விதிகளை மீறும் போஸ்ட் என்று வார்னிங் லேபிள் மட்டும் இடப்படும். மக்கள் இதன் மீதான விவாதத்தை நடத்த இது வாய்ப்பை வழங்கும் என்று மார்க் கூறியுள்ளார்.

    English summary
    Facebook losses Rs. 4.2 Lakh Crores after Ad Boycott by big corporate companies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X