நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதன்முதலாக.. நர்ஸுக்கு அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.. வைரலாகும் போட்டோ

தடுப்பூசி போட்டுக் கொண்ட நர்ஸின் போட்டோ வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

நியூயார்க்: நியூயார்க் நகரில் சான்ட்ராலின்ஸ்சே என்ற நர்சுக்கு முதலாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது... நர்ஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் இன்னும் அதிகரித்தபடிதான் இருக்கிறது.. இந்நிலையில் அமெரிக்காவின் ஃபைசர், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் பலகட்ட டெஸ்ட்களுக்கு பிறகு, வெற்றி பெற்று இப்போது அமெரிக்க ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, முதல்நிலை நோய்த்தடுப்பு பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. ஃபைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று தடுப்பூசி போடும் பணியும் ஆரம்பமானது.. நியூயார்க் நகரைச் சேர்ந்த சான்ட்ராலின்ஸ்சே என்ற நர்சுக்குதான் முதல் முதலாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்- டொனால்ட் டிரம்ப் ட்வீட் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்- டொனால்ட் டிரம்ப் ட்வீட்

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்க நேரப்படி, காலை 9.30 மணிக்கு ஊசி போடப்பட்டது... அமெரிக்க மருத்துவ வரலாற்றில் இதன்மூலம் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. அமெரிக்க வரலாற்றில் எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் அமெரிக்கர் என்ற பெயரை இவர் பெற்றுள்ளார்.

நர்ஸ்

நர்ஸ்

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நர்ஸ் சான்ட்ரா லின்ஸ்சே சொன்னதாவது, "மற்ற தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது மாதிரிதான் இதுவும் இருந்தது.. வேற எந்த வித்தியாசமும் ஊசி போட்டுக்கொள்ளும்போது உணரவில்லை... ஆனால், இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது" என்றார்.

போட்டோ

போட்டோ

சான்ட்ரா தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. இந்த போட்டோவை கண்டு, அமெரிக்கர்கள் அனைவருமே பயப்படாமல் தடுப்பூசியை செலுத்தி கொள்வார்கள் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது... சான்ட்ராவுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னுடைய ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இதனிடையே, இந்த ஆண்டு முடிவுக்குள் அமெரிக்காவில் 1 கோடியே 40 லட்சம் டோஸ்கள் வினியோகிக்க திட்டமிட்டிருப்பதாக தடுப்பூசி திட்டத்தின் தலைமை ஆலோசகர் மான்செப் ஸ்லாக்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. 2021 ஜனவரி மாதத்தில், 5 கோடி முதல் 10 கோடி டோஸ்வரையும், பிப்ரவரி மாதம் அதே எண்ணிக்கையிலும் தடுப்பூசியை வினியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

இந்த தடுப்பூசிகளை, நீண்டகால சிகிச்சையில் இருப்போர், இதர நோய்களை கொண்ட வயதானவர்கள், முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு போடப்படும் என்றும், மக்களிடையே ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகும்வரை நாட்டின் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் கொரோனா நோய் பரவல் மறுபடியும் அதிகரித்திருத்து வந்த நிலையில், தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துவிட்டதும், அதை நர்ஸ் செலுத்தி கொண்டதும், மக்களுக்கு நம்பிக்கையை அளித்து வருகிறது.

English summary
First person to receive covid vaccine in US
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X