நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பில்கேட்ஸ் முதல் ஒபாமா வரை.. 130 டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த மாஸ்டர்மைண்ட்.. சிக்கிய 17 வயது இளைஞர்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் பில்கேட்ஸ், ஒபாமா உள்ளிட்டோரின் டிவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த நபர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவரின் வெறும் 17 வயதே நிரம்பிய இளைஞர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 15ம் தேதி உலகம் முழுக்க இருக்கும் பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது. spear phishing attack என்ற முறையை பயன்படுத்தி இவர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது.

spear phishing attack என்பது குறிப்பிட்ட பிரபலங்களுக்கு மெயில்களை அனுப்பி,அந்த மெயிலில் இருக்கும் லிங்கை அந்த பிரபலங்கள் கிளிக் செய்வதன் மூலம், மொத்தமாக அவர்களின் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்வது ஆகவும். பிரபலங்களை மட்டுமே குறி வைத்து நடத்தப்படும் இந்த ஹேக்கிங் தாக்குதலுக்கு spear phishing attack என்று பெயர்.

1000 போட்டால், 2 ஆயிரம் வரும்.. ஒபாமா, பில்கேட்ஸ் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து பிட்காயின் மோசடி 1000 போட்டால், 2 ஆயிரம் வரும்.. ஒபாமா, பில்கேட்ஸ் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து பிட்காயின் மோசடி

முறைகேடு செய்யப்பட்டது

முறைகேடு செய்யப்பட்டது

இந்த spear phishing attack மூலம் மொத்தம் 130 டிவிட்டர் கணக்குகள் ஜூலை 15ம் தேதி ஹேக் செய்யப்பட்டது. இதில் எலோன் மஸ்க், வாரன் பப்பெட், கென்யே வெஸ்ட், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ் , ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ கணக்கு, கிம் கார்டிஷியன், ஜெப் பெஸோஸ் ஆகியோரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது.

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

இதில் 45கணக்குகளில் இருந்து டிவிட் செயயப்பட்டது. அதேபோல் மொத்தம் 36 கணக்குகளின் மெசேஜ்களை இந்த ஹேக்கர்கள் படித்துள்ளார். அதேபோல் 7 பேரின் கணக்கில் இருந்து முக்கியமான விஷயங்களை இவர்கள் திருடி இருக்கிறார்கள். இந்த வழக்கை நியூயார்க் எப்பிஐ போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது.

தீவிரமாக நடத்தியது

தீவிரமாக நடத்தியது

பிரபலங்களின் கணக்குகளை ஹேக் செய்த ஹேக்கர்கள், இதன் மூலம் பிட் காயின் மோசடியை செய்தனர். நாங்கள் சொல்லும் பிட்காயின் விலாசத்திற்கு 1000 டாலர் அனுப்புங்கள். அப்படி அனுப்பினால் 2000 டாலர் உங்களுக்கு கிடைக்கும் என்று அவர்கள் டிவிட் செய்தனர். பிரபலங்களின் கணக்கில் இருந்து இப்படி டிவிட் செய்யப்பட்டதால் பலர் அதை நம்பி பணத்தை அனுப்பி உள்ளனர.

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

இப்படி மொத்தமாக 1 லட்சம் டாலர் பணம் இந்த ஹேக்கர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை தீவிரமாக விசாரித்த போலீஸ் தற்போது குற்றவாளிகளை கைது செய்துள்ளது. புளோரிடாவை சேர்ந்த 17 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பெயர் கிரகாம் இவான் கிளார்க் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் செப்பர்டு என்ற 19 வயது இளைஞர் மற்றும் நிமா பசோலி என்ற 22 வயது இளைஞர் என்று மூன்று பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இவர்கள் மீது மொத்தம் 30 வழக்குகள் பதியப்பட்டு உள்ளது. இதில் 17 வயது இளைஞர்தான் இந்த மோசடிக்கு மொத்தமாக மாஸ்டர் மைண்டாக செயல்பட்டுள்ளார். இவர் தனது வீட்டின் அறையில் இருந்து கொண்டே இப்படி ஹேக்கிங் செய்துள்ளார். மற்ற இரண்டு பேரும் இவருக்கு உதவி செய்து இருக்கிறார்கள். இது தொடர்பாக தற்போது தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

English summary
Florida teen arrested over the hacking of Bill gates, Obama and 128 others Twitter account last July 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X