நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கலபகோஸ்னு ஒரு தீவு இருக்கறது உங்களுக்கு தெரியுமா.. அது வானத்துல இருந்து பார்த்தா இப்டிதான் இருக்கும்

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட கலபகோஸ் தீவின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட கலபகோஸ் தீவின் புகைப்படங்கள் நெட்டிசன்களை ஆச்சரியக் கடலில் தத்தளிக்கச் செய்துள்ளது.

ஈக்குவடார் நாட்டில் இருந்து சுமார் 1,000 கி.மீ தூரத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு எரிமலைத் தீவு தான் கலபகோஸ் தீவுகள். இது வனவிலங்குகளைப் பார்ப்பதற்கான உலகின் முன்னணி இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன் தனிமைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பு தாவர மற்றும் விலங்கு இனங்களின் பன்முகத்தன்மைக்கு உறுதுணையாக இருக்கிறது.

Galapagos Islands picture taken from space leaves netizens awe-struck

கடந்த 1835ம் ஆண்டு சார்லஸ் டார்வின் தான் இந்த தீவைக் கண்டுபிடித்தார். அவரது பரிணாமக் கோட்பாடு தத்துவத்துக்கு கலபகோஸ் தீவு பற்றிய அவதானிப்புகள் அவருக்கு பெரும் உதவியாக இருந்தன. இந்த தீவுகளின் இன்னமும் அரியவகை உயிரினங்கள் பல வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

Galapagos Islands picture taken from space leaves netizens awe-struck

இந்நிலையில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட கலபகோஸ் தீவின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கி ஆராய்ச்கிகளை மேற்கொண்டு வரும் விண்வெளி வீரர் கிரிஸ் காசிடி, இந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Galapagos Islands picture taken from space leaves netizens awe-struck

அந்த பதிவில், "கலபகோஸ் தீவுகளை இன்று கடந்து சென்றபோது பார்த்த அழகான காட்சி", என கிரிஸ் குறிப்பிட்டுள்ளார். ஏதோ மார்டன் ஆர்ட் போல காட்சியளிக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியக் கடலில் தத்தளித்த வருகின்றனர். கலபகோஸ் தீவின் நிலப்பரப்பை ஏரியல் வியூவில், அதுவும் விண்வெளியில் இருந்து பார்ப்பது என்பது சாதாரண காரியமா என்ன? என வியந்து போன நெட்டிசன்கன், இந்த வாய்ப்பை தந்த கிரிஸ் காசிடிக்கு பாரட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

Galapagos Islands picture taken from space leaves netizens awe-struck

ஆன்லைன் வகுப்புனாலும்.. தாலாட்டு தாலாட்டு தான்.. ஆஹா என்னா அருமையா தூங்குறான் இந்தக் குட்டிப்பையன்!ஆன்லைன் வகுப்புனாலும்.. தாலாட்டு தாலாட்டு தான்.. ஆஹா என்னா அருமையா தூங்குறான் இந்தக் குட்டிப்பையன்!

English summary
Galapagos Islands picture taken from space which was released by Nasa astronaut Chris Cassidy leaves netizens awe-struck.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X