நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடர்ந்து அசத்தும் முகேஷ்.. 6.5 ஆயிரம் கோடி.. ஜியோவின் 1.34% பங்கை வாங்கிய ஜெனரல் அட்லாண்டிக்

ரிலையன்ஸ் ஜியோவின் 1.34% பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ரிலையன்ஸ் ஜியோவின் 1.34% பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த இரண்டு வாரத்தில் செய்யப்படும் நான்காவது பெரிய முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Reliance Jio receives Mega investment from General Atlantic

    உலகின் முன்னணி நிறுவனங்கள் பல வரிசையாக ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளது. இதன் மூலம் இந்தியாவிலும், உலக அளவிலும் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது .

    உலகம் முழுக்க பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் கூட, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பொருளாதார ரீதியாக நிறைய முதலீடுகளை பெற்று வருகிறது.

    12 மாவட்டங்களில் மட்டும் ஏன் லாக்டவுன்.. 25 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி.. இதுதான் காரணம்12 மாவட்டங்களில் மட்டும் ஏன் லாக்டவுன்.. 25 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி.. இதுதான் காரணம்

    ஜியோ முதலீடு

    ஜியோ முதலீடு

    இந்த நிலையில் வரிசையாக ஜியோ நிறுவனத்தில் பல்வேறு அமெரிக்கா நிறுவனங்கள் முதலீடுகளை செய்து வருகிறது. பல்வேறு கோடிகளுக்கு தொடர்ந்து ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று ரிலையன்ஸ் ஜியோவின் 1.34% பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த இரண்டு வாரத்தில் செய்யப்படும் நான்காவது பெரிய முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    பேஸ்புக் நிறுவனம்

    பேஸ்புக் நிறுவனம்

    ஜியோவின் பங்குகளை 6598.38 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனம் வாங்கியுள்ளது. தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு பங்கு மதிப்பு 4.91 கோடி ரூபாய் என்ற விலைக்கு வாங்கி உள்ளது. இதன் நிறுவன மதிப்பு தற்போது 5.16 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையில் உள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் முதலீடு செய்துள்ளது. 43,574 கோடி ரூபாயை பேஸ்புக் ஜியோவில் முதலீடு செய்துள்ளது .

    மூன்றாவது முதலீடு இது

    மூன்றாவது முதலீடு இது

    இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் டெலிகாம் கீழ் வரும் ஜியோ நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளைப் பேஸ்புக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு உள்ளது. இது ரிலையன்ஸ் ஜியோவில் செய்யப்பட்ட மிக முக்கியமான முதலீடு ஆகும். இந்தியாவில் ஆன்லைன் மார்கெட்டிங்கில் களமிறங்க வேண்டும் என்று பேஸ்புக் பல வருடமாக திட்டமிட்டு வந்தது. தற்போது அது நிறைவேறி உள்ளது. இதனால் பேஸ்புக் - ஜியோ ஒன்றாக இணைந்துள்ளது.

    தொடரும் முதலீடு

    தொடரும் முதலீடு

    அதன்பின் அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனம் ஜியோவின் பங்குகளை 5655 கோடிக்கு வாங்கியது. ஜியோவின் 1.5% பங்குகளை அந்த நிறுவனம் வாங்கியது. அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான விஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 2.32% பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் ஜியோவின் பங்குகளை 11637 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த நான்கு நிறுவனங்கள் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 67,194.75 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது.

    English summary
    General Atlantic buys 1.34% stake from Jio Platforms for Rs 6.5cr today after FB.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X