நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கதறி அழும் சிறுமி யார்னு தெரியுதா.. 8 நிமிடம், 46 செகண்ட் வீடியோ எடுத்து.. அமெரிக்காவை அலற விட்டவர்

ஜார்ஜை கொன்ற கொடூரத்தை வீடியோ எடுத்த சிறுமி பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

நியூயார்க்: "நான் ஒரு சின்ன பெண்.. மைனர் பெண்.. அந்த சம்பவத்தை பார்த்ததும் பயந்துட்டேன்.. என்னால அந்த போலீஸ் அதிகாரியை தடுத்து போராட முடியும்னு நினைக்கிறீங்களா? ஜார்ஜ் இறந்த இடத்துக்கு 5 அடி தூரத்தில்தான் நான் நின்று கொண்டிருந்தேன்.. மிக மோசமான சம்பவம் அது" என்று ஜார்ஜ் பிளாயிடின் கழுத்தை நெரித்து கொன்ற வீடியோவை எடுத்த சிறுமி அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார்.

"ஆளுநர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களால் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லையா? அப்படி என்றால் நான் ராணுவத்தை இறக்க போகிறேன்" என்று டிரம்ப் கதறி கொண்டே இருக்கிறார்.

ஆனாலும் அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டே இருக்கிறது.. இதற்கெல்லாம் கருப்பினரான ஜார்ஜை கொன்ற அந்த 8 நிமிட, 46 செகண்ட் ஓடும் வீடியோதான்!

கண்ணாடிக்குள் இருக்கிறாள்.. அவளை அணைக்க கூட முடியவில்லை.. மும்பை பெண்ணின் கண்ணீர் கொரோனா கதை!கண்ணாடிக்குள் இருக்கிறாள்.. அவளை அணைக்க கூட முடியவில்லை.. மும்பை பெண்ணின் கண்ணீர் கொரோனா கதை!

பெட்டிக்கடை

பெட்டிக்கடை

மின்னபொலிஸ் நகரில், மே 25-ம் தேதி ஒரு பெட்டிக்கடைக்கு ஜார்ஜ் சென்றிருக்கிறார்.. சிகரெட் வேண்டும் என்று கேட்டு 20 டாலர் நோட்டை எடுத்து நீட்டுகிறார்.. உடனே கடைக்காரரையோ, அந்த நோட்டை பார்த்ததும் போலி டாலர் என தவறுதலாக நினைத்துகொண்டு, போலீசுக்கு போன் செய்கிறார்.. 4 போலீசாரும் அடுத்த செகண்டே அங்கு வந்து ஜார்ஜை விசாரிக்கிறார்கள்.

 ஆவேசம்

ஆவேசம்

விசாரணையின்போது ஆவேசமடைந்த ஒரு உயர் போலீஸ்காரர் டெரண் ஜோவின் என்பவர் ஜார்ஜ் கழுத்தை பிடித்து முட்டியில் அமுக்குகிறார்.. கழுத்து நெரிபடுகிறது.. மூச்சு விடமுடியவில்லை என்று ஜார்ஜ் கதறுகிறார்.. ஆனாலும் அந்த போலீஸ் அதிகாரி முட்டியை சிறிதும் நகர்த்தாமல், அழுத்தத்தை மட்டும் மேலும் மேலும் தந்து கொண்டே இருக்கிறார்.. இதை உடன் இருந்த மற்ற 3 போலீஸ்காரர்களும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

 அதிர்வலை

அதிர்வலை

மூச்சு திணறி திணறியே ஜார்ஜ் உயிர் பிரிகிறது. இந்த வீடியோதான் உலகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது.. இதன் தாக்கம் இன்னமும் குறையவில்லை.. உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது.. அதிபர் பதவிக்கு சிக்கல் வரும் அளவுக்கு சர்ச்சை கிளம்பி உள்ளது.. அடுத்த வரப்போகும் தேர்தலில் அதிபர் நிலை கேள்விக்குறியாகும் அளவுக்கு இந்த சம்பவம் வெடித்து வன்முறையை கிளப்பி விட்டு வருகிறது.

Recommended Video

    George Floyd-பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?
     மார்ட்டின் லூதர் கிங்

    மார்ட்டின் லூதர் கிங்

    மார்ட்டின் லூதர் கிங்குக்கு பிறகு இப்படி ஒரு போராட்டம் இப்போதுதான் வல்லரசு நாட்டில் நடக்கிறது. இந்த விவகாரத்துக்கு காரணமாக இருந்த வீடியோவை எடுத்தது ஒரு சிறுமி.. அவருக்கு 17 வயது.. பெயர் டார்னெல்லா ஃப்ரேஸர். இவரும் கருப்பின சிறுமிதான். வீடியோ எடுக்கும்போதே கதறி துடிக்கிறார் சிறுமி.. "ஜார்ஜ்தான் உயிருக்கு போராடுகிறார்ன்னு தெரியுதே, ஏன் காப்பாற்ற போகவில்லை" என்று டார்னெல்லாவை பார்த்து கேள்வியும் பலர் எழுப்பி கொண்டே இருந்தனர்.

    பயந்துட்டேன்

    பயந்துட்டேன்

    இந்நிலையில், நவ்தீஸ் மீடியா மூலம் தன் தரப்பு பதிலை சொல்லி உள்ளார் டார்னெல்லா. அதில், "நான் ஒரு சின்ன பெண்.. மைனர் பெண்.. அங்கே நடந்த அந்த சம்பவத்தை பார்த்ததும் பயந்துட்டேன்.. என்னால அந்த போலீஸ் அதிகாரியை தடுத்து போராட முடியும்னு நினைக்கிறீங்களா? ஜார்ஜ் இறந்த இடத்துக்கு 5 அடி தூரத்தில்தான் நான் நின்று கொண்டிருந்தேன்,.. அந்த நேரத்தில் என் உணர்வை எப்படி சொல்வேன் என தெரியவில்லை. மிக மோசமான சம்பவம் அது.. இந்த விஷயத்தை என் இடத்தில் இருந்து பார்த்திருந்தால்தான் புரியும்" என்கிறார்.

    English summary
    george floyd: 8 minutes and 46 Seconds, how george was killed in police custody
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X