நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தாங்க முடியவில்லை.. ஜார்ஜ் "கொலையால்" பொங்கி எழுந்த ஒபாமா.. டிரம்ப் எதிர்பார்க்காத திருப்பம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் அதிபர் ஒபாமா மிகவும் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

    வெடித்தது மக்கள் போராட்டம்... சிவில் வார் அச்சத்தில் அமெரிக்கா

    அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயது கறுப்பின இளைஞர் கடந்த 27ம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவரை கைது செய்த போது போலீசார் இவரை காருக்கு வெளியே தள்ளி கழுத்தை நெரித்தனர். இதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தற்போது ஜார்ஜ் பிளாய்ட் மரணம் காரணமாக அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அமெரிக்கா முழுக்க இதனால் மிக தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்படாதது குறித்து அறிக்கை கேட்ட ஹைகோர்ட்மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்படாதது குறித்து அறிக்கை கேட்ட ஹைகோர்ட்

     ஒபாமா கருத்து

    ஒபாமா கருத்து

    இது தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்காவில் இப்படி கருப்பின இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது எனக்கு பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. இது சாதாரண விஷயம் கிடையாது. என்னால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. நாம் உண்மையில் 2020ம் ஆண்டில்தான் வசிக்கிறோமா என்று சந்தேகம் வந்து இருக்கிறது.

    தவறான விஷயம்

    தவறான விஷயம்

    2020ல் இப்படி ஒரு விஷயம் அமெரிக்காவில் நடப்பது இயல்பானது கிடையாது. நாம் நமது குழந்தைகளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இதனால் நாம் இப்போது வாழும் நாட்டை நல்லதாக நாம் மாற்ற வேண்டும். நாம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். கொல்லப்பட்ட ஜார்ஜுக்கு உடனே நீதி கிடைக்க வேண்டும். அவருக்கு நீதி கிடைப்பது மட்டுமே தீர்வு.

    பெரிய தோல்வி

    பெரிய தோல்வி

    நாம் மொத்தமாக ஒரு மனித குலமாக இதில் தோல்வி அடைந்துவிட்டோம். நமது கொள்கை மற்றும் நிறத்திற்கு அப்பாற்பட்டு நாம் இதில் தோல்வி அடைந்துவிட்டோம். அமெரிக்காவில் சமத்துவமன்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாம் இந்த கருத்துக்களை வளர விட கூடாது. இது போன்ற விஷம மருந்துகள் வளர்வதை நாம் உடனே தடுக்க வேண்டும். நமது இதயத்தில் இவர்கள் நஞ்சை விதைக்கிறார்கள்.

    இயல்பு நிலை

    இயல்பு நிலை

    இந்த மோசமான நோய் பரவும் காலத்தில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பது தான் எல்லோரின் விருப்பம். ஆனால் அமெரிக்காவில் பல கோடி அமெரிக்கர்கள், அவர்களின் நிறம் காரணமாக ஒதுக்கப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள். அதை கவனித்ததில் கொள்ள வேண்டும். அதை சரி செய்யாமல் நம்மால் இயல்பு நிலைக்கு திரும்பவே முடியாது.

    இரங்கல் சொல்கிறேன்

    இரங்கல் சொல்கிறேன்

    இந்த புதிய தாக்குதல்கள், கொலைகள் என் மனதை நொறுக்கி உள்ளது. இது போன்ற கொலைகள் நிற்காமல் தொடர்கிறது. பலர் வரிசையாக நிறம் காரணமாக கொலை செய்யப்படுகிறார்கள். கறுப்பின மக்கள் வாழ வேண்டும். இந்த கொடூரமான சம்பவத்தால் கொல்லப்பட்ட ஜார்ஜுக்கு என் இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் வேகமான நீதி கிடைக்க வேண்டும் , என்று ஒபாமா குறிப்பிட்டு இருக்கிறார்.

    செம என்ட்ரி

    செம என்ட்ரி

    இந்த அமெரிக்க போராட்டம் குறித்தும், ஜார்ஜ் கொலை குறித்து ஒபாமா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார் . அதேபோல் இன்னொரு பக்கம் அவரின் மனைவி மிட்சல் ஒபாமா இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பேசி வருகிறார். இவர்களின் வருகை அதிபர் டிரம்பிற்கு பெரிய அழுத்தமாக மாறியுள்ளது. ஏற்கனவே பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வரும் டிரம்ப், ஒபாமா வருகையால் அதிர்ச்சியில் இருக்கிறார்.

    English summary
    George Floyd death: Obama view on the protest pressures President Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X