நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்னைபர்களை களமிறக்கிய டிரம்ப்.. இணையம் துண்டிப்பு.. முடக்கப்பட்ட வாஷிங்க்டன்.. எதிர்பாராத திருப்பம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு வாஷிங்க்டன் பகுதியில் தேசிய பாதுகாப்பு படையின் ஸ்னைப்பர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    வெடித்தது மக்கள் போராட்டம்... சிவில் வார் அச்சத்தில் அமெரிக்கா

    அமெரிக்காவில் கடந்த 24ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து அழைத்து செல்லும் போது கழுத்தை நெரித்தலில் சம்பவ இடத்திலேயே ஜார்ஜ் பலியானார்.

    ஜார்ஜ் கழுத்தை நெரித்து போலீஸ் கொலை செய்யும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. போலீஸ் செய்த இந்த கொடூரத்திற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    தாங்க முடியவில்லை.. ஜார்ஜ் தாங்க முடியவில்லை.. ஜார்ஜ்

    வெள்ளை மாளிகை

    வெள்ளை மாளிகை

    நேற்று வரை மின்னேசோட்டா, நியூயார்க் பகுதியில் போராட்டம் நடந்து வந்த நிலையில் நேற்று இரவு போராட்டம் வெள்ளை மாளிகைக்கு வந்தது. வெள்ளை மாளிகைக்கு அருகே மக்கள் போராட்டம் செய்தனர். ஜார்ஜ் படுகொலைக்கு நீதி கேட்டு வெள்ளை மாளிகையை போராட்டம் செய்யும் நபர்கள் சுற்றி வளைத்தனர். அங்கு இதனால் வெள்ளை மாளிகை விளக்கு அணைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .

    கண்டதும் சுட உத்தரவு

    கண்டதும் சுட உத்தரவு

    அங்கு தற்போது தேசிய பாதுகாப்பு படை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறது. போராட்டம் செய்யும் கருப்பின் மக்களை எல்லாம் தேசிய பாதுகாப்பு படையினர் கைது செய்து வருகிறார்கள். அங்கு தேசிய பாதுகாப்பு படைக்கு கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. போராட்டம் என்று வன்முறையில் ஈடுபடும் நபர்களை கண்டதும் சுட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    ஸ்னைபர் வந்தனர்

    ஸ்னைபர் வந்தனர்

    அதேபோல் அங்கு ஸ்னைபர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். கலவரம் செய்யும் நபர்களை சுட்டுத் தள்ளும் வகையில் ஸ்னைபர் துப்பாக்கிகளை பயன்படுத்தும் பாதுகாப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். இதனால் இனி போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடக்க வாய்ப்புள்ளதுஎன்கிறீர்கள். போராட்டத்தை அரசு கட்டுப்படுத்த தவறிய காரணத்தால் தற்போது தீவிரமான போக்கை கடைபிடிக்க அரசு முடிவெடுத்துள்ளது என்கிறார்கள்.

    இணையம் துண்டிப்பு

    இணையம் துண்டிப்பு

    இந்த நிலையில் வாஷிங்க்டனில் கடந்த 4 மணி நேரமாக இணையம் செயல்படவில்லை. தொலைபேசி இணைப்புகள் இயங்கவில்லை. இதனால் மொத்தமாக வெளி உலகத்தில் இருந்து வாஷிங்கடன் துண்டிக்கப்பட்டு உள்ளது. அங்கு என்ன நடக்கிறது, மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று விவரம் வெளியாகவில்லை. இதனால் அங்கு பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது .

    என்ன நடக்குமோ

    என்ன நடக்குமோ

    பொதுவாக அமெரிக்காவில் வெள்ளை மாளிகை உள்ளே அனுமதி இல்லாமல் யாரும் செல்ல முடியாது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு நடந்த போராட்டத்தில் பல போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகை உள்ளே சென்று விட்டு வந்து இருக்கிறார்கள். கதவு அருகே வரை சென்றுள்ளனர். ஆனால் அதன் உட்பக்க வாயில் பூட்டப்பட்ட இருந்தது. இதனால் வெஸ்ட் விங் அல்லது ஓவல் அலுவலகம் அருகே போராட்டக்காரர்கள் செல்ல முடியவில்லை.

    போராட்டம் வெடித்தது

    போராட்டம் வெடித்தது

    மின்னேபோலிஸ் நகரத்தில் மட்டுமே போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு வாஷிங்க்டன் பற்றி எறிவது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வெள்ளை மாளிகைக்கு உள்ளே அதிபர் டிரம்ப் பதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் பங்கருக்கு உள்ளே இருந்து அதிபர் பாதுகாப்பு படை வீரர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

    English summary
    George Floyd death: Sniper brought in Washinton amid rising protest tension in the US.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X