நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவனை கொன்றுவிட்டனர்.. டிரம்ப் என்னை பேச கூட விடவில்லை.. ஜார்ஜ் மரணம் பற்றி சகோதரர் பகீர் பேட்டி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் போலீஸ் விசாரணையின் போது கொல்லப்பட்ட கருப்பின இளைஞரின் சகோதரர் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Recommended Video

    அமெரிக்காவில் தொடரும் போராட்டம்... தயார் நிலையில் ராணுவம்

    அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவர் போலீசாரால் கொலை செய்யப்பட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஐந்து நாட்களாக அங்கு இதனால் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது கறுப்பின இளைஞர் கடந்த 27ம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவர் கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்த போது போலீசார் இவரை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தி இருக்கிறார்கள்.

    கருப்பினர் படுகொலை.. சிக்கித் தவிக்கும் டிரம்ப்.. அதிபர் தேர்தலில் வச்சு செய்ய போகும் அமெரிக்கர்கள்கருப்பினர் படுகொலை.. சிக்கித் தவிக்கும் டிரம்ப்.. அதிபர் தேர்தலில் வச்சு செய்ய போகும் அமெரிக்கர்கள்

    மரணம்

    மரணம்

    விடாமல் 10 நிமிடம் இவரின் கழுத்தில் காலை வைத்து போலீசார் அழுத்தி உள்ளார். இதில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியான நிலையில், தற்போது இது அங்கு பெரிய உள்நாட்டு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.இந்த மரணம் காரணமாக அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. முதலில் மின்னேபோலிஸ் பகுதியில் மட்டும் போராட்டம் நடந்தது.

    பெரிய போராட்டம்

    பெரிய போராட்டம்

    அதன்பின் இந்த போராட்டம் அப்படியே மின்னெசோட்டா வரை விரிவடைந்தது. தற்போது அமெரிக்கா முழுக்க இந்த போராட்டம் விரிவடைந்து இருக்கிறது. பல மாகாணங்களில் இந்த போராட்டம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த போராட்டங்கள் தற்போது டிரம்பிற்கு எதிராக திரும்பி இருக்கிறது. அதிபர் டிரம்ப் இந்த போராட்டங்கள் காரணமாக பெரிய எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்த போராளிகளை நாய்கள் என்றும், திருடர்கள் என்றும் டிரம்ப் கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    டிரம்ப் நிலை

    டிரம்ப் நிலை

    இந்த நிலையில் அதிபர் டிரம்ப், கொலை செய்யப்பட ஜார்ஜ் பிளாய்டின் சகோதரர் பிலோனைஸ் பிளாய்டுடன் பேசினார். போனில் தொடர்பு கொண்டு டிரம்ப் இரங்கல் தெரிவித்தார் . ஆனால் இதுவே தற்போது அதிபர் டிரம்பிற்கு எதிராக திரும்பி இருக்கிறது. அதன்படி இந்த போன் கால் தனக்கு பெரிய அதிர்ச்சி அளித்ததாக கொலை செய்யப்பட ஜார்ஜ் பிளாய்டின் சகோதரர் பிலோனைஸ் பிளாய்டு தெரிவித்துள்ளார். அதில், டிரம்ப் எனக்கு போன் செய்வார் என்பது தெரிந்ததுதான்.

    குரல் கேட்கவில்லை

    குரல் கேட்கவில்லை

    ஆனால் அவர் என்னை பேசவே அனுமதிக்கவில்லை. என் குரலை கூட வர கேட்கவில்லை. அவராக போன் செய்தார். பேசினார், போனை வைத்துவிட்டார். என் தரப்பை பேச அவர் விரும்பவில்லை. நான் அவரிடம் பேச முயன்றேன். அன்று நடந்த சம்பவத்தை விளக்க முயன்றேன். ஆனால் டிரம்ப் வேண்டும் என்றே அதற்கு அனுமதிக்கவில்லை.

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    அவர் ஏன் எனக்கு போன் செய்தார் என்றே தெரியவில்லை. எல்லாம் அரசியல். நீ பேச வருவதை நான் ஏன் கேட்க வேண்டும் என்பது போல அவர் நடந்து கொண்டார். எனக்கு இது மிக கஷ்டமாக இருக்கிறது.நான் அவரிடம் நீதி வேண்டும் என்று கேட்டேன். ஒரு முன்னேறிய தேசத்தில், பட்ட பகலில் இப்படி கொலை நடக்கிறது. என்னை இது பெரிய அளவில் பாதித்து உள்ளது. என் மனம் உடைந்துள்ளது.

    எங்கள் மக்கள்

    எங்கள் மக்கள்

    எங்கள் கறுப்பின மக்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். எனக்கு புரியவில்லை. நாங்கள் ஏன் இதை எல்லாம் எதிர்கொள்ள வேண்டும். என் சகோதரனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவனை இனி பார்க்க முடியாது. அவனை கொன்றுவிட்டார்கள். என்று கொலை செய்யப்பட ஜார்ஜ் பிளாய்டின் சகோதரர் பிலோனைஸ் பிளாய்டு கூறி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி டிரம்பிற்கு மேலும் நெருக்கடியாக மாறியுள்ளது.

    English summary
    George Floyd's death: The brother of the victim accuses Trump over his condolence phone call.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X