நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாயை தொறந்தாலே நிறவெறி.. டிரம்ப்பின் கருத்து & போட்டோவை புரமோட் செய்ய மாட்டோம்.. ஸ்நாப் சேட் அதிரடி

டிரம்பின் நிறவெறி கருத்தினை புரமோட் செய்ய ஸ்நாப் சேட் மறுப்பு தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

நியூயார்க்: வாயை திறந்தாலே நிறவெறி கருத்துக்கள்தான்.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துகள் நிறவெறிக்கு ஆதரவாக இருப்பதால் அவரது கருத்துகளை நாங்கள் பிரமோட் செய்ய மாட்டோம் என்று ஸ்நாப் சாட் தெரிவித்துள்ளது.

Recommended Video

    அமெரிக்காவில் என்ன நடக்கிறது? விளக்குகிறார் நமது செய்தியாளர்

    அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.. ஜார்ஜ் என்ற கறுப்பினத்தவரை கழுத்தை நெரித்து கொன்றதால் மக்கள் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள்... வன்முறைகளும், போராட்டங்களும் பெருகி கொண்டு வருகின்றன.

    கருப்பின இளைஞரை கொலை செய்த அந்த உயர் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கொண்டே இருந்தனர்.

    படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா வைரஸ்.. வெளியானது பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா வைரஸ்.. வெளியானது பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை

     விவாகரத்து

    விவாகரத்து

    அதனடிப்படையில் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.. அவரது மனைவியும் அவரை டைவர்ஸ் செய்ய போவதாக சொல்லிவிட்டார்.. மற்றொரு பக்கம் இந்த வன்முறை போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர் . ஆனாலும் மக்களை இன்னமும் அடக்க முடியவில்லை.. அவர்களை சமாதானப்படுத்த அதிபராலும் முடியவில்லை.

     நாய்கள்

    நாய்கள்

    மாறாக, போராட்டம் செய்பவர்களை "நாய்கள்" என்பது உட்பட பல தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி காயப்படுத்துவதாக அதிபர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த போராட்டக்காரர்கள் 'கலைந்து செல்லவில்லை என்றால் சுடப்படுவீர்கள்' என்று டிரம்ப் டிவீட் செய்தது மேலும் கொந்தளிப்பை தந்தது.. ஆனால் அந்த கருத்து தங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என டிவிட்டர் நிர்வாகம் அதை நீக்கிவிட்டது..

     ஸ்நாப் சாட்

    ஸ்நாப் சாட்

    அதுமட்டுமல்ல, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தங்கள் புரொபைல் போட்டோவையும் கருப்பு நிறத்தில் மாற்றி தங்கள் ஆதரவை பகிரங்கமாகவே தெரிவித்தது. இந்நிலையில் ஸ்நாப் சாட்டீலும் டிரம்ப்பின் கணக்கை புரமோட் செய்ய மாட்டோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அவரது கருத்துகள் மற்றும் போட்டோக்களை ப்ரமோட் செய்யப்போவதில்லை என்று ஸ்நாப் சேட் தெரிவித்துள்ளது.. 22 கோடி பேரால் இந்த ஸ்நாப் சாட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    முடக்கம்

    முடக்கம்

    அதிபரின் கணக்கை புரமோட் செய்யப்போவதில்லை என்று சொன்னாலும், அவரது கணக்கு அப்படியே தொடர்ந்து செயல்படும் என்று ஸ்நாப் சேட் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கண்டனங்களும், எதிர்மறை விமர்சனங்களும் டிரம்ப் மீது வலுத்துவரும் நிலையில், சமூகவலைதளங்களை முடக்கும் அளவுக்கு நிறவெறியை அதிபர் தூண்டி வருகிறாரா என்ற வலுவான கேள்வியும் எழுந்து வருகிறது.

    English summary
    george floyd: snapchat stops promoting trumps account due to his violence tweets
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X