நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விசா தடை! 'பெருத்த ஏமாற்றம்'.. வெள்ளை மாளிகையின் பரபரப்பு அறிவிப்பால் சுந்தர் பிச்சை வேதனை டுவிட்

Google Oneindia Tamil News

நியூயார்க்: கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, 2020 இறுதி வரை வேலை விசாக்களை நிறுத்திவைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பால் தான் ஏமாற்றமடைந்தாக கூறியுள்ளார்.

Recommended Video

    H-1B Visa Suspension : இந்த ஆண்டு இறுதி வரை ரத்து.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. பின்னணி

    புலம்பெயர்ந்தோருடன் தொடர்ந்து நின்று அனைவருக்கும் வாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் செயல்படும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூறினார்.

    இது தொடர்பாக சுந்தர் பிச்சை வெளியிட்ட்ட ட்விட் பதிவில், " குடியேற்றங்கள் (வெளிநாட்டவர்) அமெரிக்காவின் பொருளாதார வெற்றிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது, இதனால் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவனாகவும் அமெரிக்கா உயர்ந்தது, இதனால் இன்று கூகுள் நிறுவனமாகவும் உள்ளது. இன்றைய பிரகடனத்தால் (அமெரிக்க அரசின் அறிவிப்பு) ஏமாற்றமடைந்துள்ளோம். ங்கள் தொடர்ந்து புலம்பெயர்ந்தோருடன் நின்று அனைவருக்கும் வாய்ப்பை விரிவுபடுத்துவதற்காக பணியாற்றுவோம்," என்று கூறியுள்ளார்.

    எச்1 பி , எச் 4 விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. பின்னணி எச்1 பி , எச் 4 விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. பின்னணி

    டிரம்ப் அறிவிப்பு

    2020 ஆம் ஆண்டின் இறுதி வரை எச் -1 பி, எச் -2 பி, எல் மற்றும் ஜே போன்ற பிரிவுகளில் வழங்கப்பட்ட பணி விசாக்களை நிறுத்தி வைக்கும் பிரகடனத்தை அதிபர் டிரம்ப் வெளியிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு சுந்தர் பிச்சையிடம் இருந்து இப்படி ஒர ட்வீட் வந்துள்ளது.

    வெள்ளை மாளிகை

    முன்னதாக விசாக்கள் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து அமெரிக்காவவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், . "எச் -1 பி, எச் -2 பி மூலம் கூடுதல் தொழிலாளர்களின் நுழைவு, ஜே, மற்றும் எல் அல்லாத புலம்பெயர்ந்தோர் விசா திட்டங்கள், கெரோனா பரவலால் ஏற்பட்ட அசாதாரண பொருளாதார இடையூறுகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை முன்வைக்கின்றன. எனவே இந்த ஆண்டு இறுதி வரை இவை ரத்து செய்யப்படுகின்றன. எனினும் இந்த விசாக்களில் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு இந்த ரத்து பொருந்தாது" என்று கூறியுள்ளது.

    எச் -1 பி விசா

    எச் -1 பி விசா

    எச் -1 பி விசா என்பது அமெரிக்காவிற்குச் செல்லும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வேலைவாய்ப்பு விசாக்களில் ஒன்றாகும். இந்த விசாக்களில் பெரும்பான்மையானவை கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களும், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டி.சி.எஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோவும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பணியாளர்களை அனுப்ப பயன்படுத்தி வந்தன. இப்போது அதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

    அக்டோபர்ரி சரியாகும்

    அக்டோபர்ரி சரியாகும்

    இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ்காம் முன்னர் தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கு "அத்தியாவசிய தொழிலாளர்கள்" என்று கருதி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் இருந்து அமெரிக்க அதிபர் மாளிகை விலக்கு அளிக்க வேண்டும் கோரியிருந்தது. ஆனால் வெள்ளை மாளிகை பிரகடனத்தில் விதிகளை தளர்த்த முன்வரவில்லை.அண்மையில் நாஸ்காம் துணைத் தலைவர் சிவேந்திர சிங், "இந்த பிரச்சினை ஏற்கனவே பல்வேறு மட்டங்களில் எழுப்பப்பட்டுள்ளது. இடைநீக்கம் தற்காலிகமானது மற்றும் அக்டோபருக்கு முன்பே முடிவடையும் என்று நம்புகிறேன் இடைநீக்கம் அதன் பிறகும் தொடர்ந்தால், தற்போது அமெரிக்காவில் இல்லாத மற்றும் COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு வீடு திரும்பிய தற்போதைய H-1B வைத்திருப்பவர்களை பாதிக்கும். இது செப்டம்பர் மாதத்திற்கு அப்பால் தொடர்ந்தால், இது புதிய விசா ஒப்புதல்களை பாதிக்கும்" என்று தெரிவித்தார்.

    English summary
    IGoogle CEO Sundar Pichai disappointed with visa ban: "immigration has contributed immensely to America’s economic success, making it a global leader in tech, and also Google the company it is today. Disappointed by today’s proclamation - we’ll continue to stand with immigrants and work to expand opportunity for all."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X