நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுந்தர் பிச்சைக்கு பதில் புதிய சிஇஒவை தேடுகிறதா கூகுள்? லிங்க் டு இன் பதிவால் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    LinkedIn Google ceo Post | சுந்தர் பிச்சைக்கு பதில் புதிய சிஇஒவை தேடுகிறதா கூகுள்?..பரபரப்பு

    நியூயார்க்: சுந்தர் பிச்சைக்கு பதிலாக கூகுள் நிறுவனம் புதிய சிஇஒவை தேடுவதாக லிங்க் டு இன் வேலை வாய்ப்பு தளத்தில் கூகுள் பெயரில் போலியாக வெளியான பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    காலையில் கண் விழித்தாலோ பலர் மொபைலில் கூகுளில் தான் கண் விழிக்கிறார்கள். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் மக்களிடம் ஒன்றிப்போய் உள்ளது கூகுள் நிறுவனம். அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சுந்தர் பிச்சை. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை சிஇஒ வாக இருப்பது தமிழர்களுக்கு பெருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது.

    google Looking for new CEO replace for sundar pichai?

    இப்படி மதிப்புமிக்க கூகுள் சிஇஒ பதவிக்கு கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சைக்கு பதில் புதிய சிஇஒவை தேடுவதாக பிரபல வேலை வாய்ப்பு நிறுவனமான லிங்க் டு இன் தளத்தில் பதிவு ஒன்று வெளியாகி இருந்தது. இதை பார்த்த பலரும் கூகுளின் சிஇஒ பதவிக்கு ஆசை ஆசையாக உடனடியாக விண்ணப்பித்துள்ளனர்.

    ஆனால் இந்த பதிவு போலியானது என்பது பின்னர் தெரியவந்தது. நெதர்லாந்தை சேர்ந்த மைக்கேல் ரிஜிண்டர்ஸ் என்பவர் இப்பதிவை வெளியிட்டுள்ளார்.இவர் ஆன்லைனில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்பவர் ஆவார்.

    லிங்கு இன் வலை பதிவில் இப்படி ஒரு பாதுகாப்பு பிழை இருப்பதை சுட்டிக்காட்வே இந்த பதிவினை தான் வெளியிட்டதாக ரஜிண்டர்ஸ் லிங்டு இன் தளத்திற்கு தகவல் அனுப்பினார். இதையடுத்து பாதுகாப்பு பிழை இருப்பதை சுட்டிக்காட்டிய ரிஜிண்டர்ஸ்க்கு நன்றி தெரிவித்த லிங்டு இன் தளம் அந்த போலி பதிவினை நீக்கியது.

    English summary
    google Looking for new CEO replece for sundar pichai? some fake post viral in linkedin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X