நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்நாள் பிரச்சாரத்திற்கு சென்ற அதிபருக்கு பெரிய ஷாக்.. டிரம்பை வீழ்த்திய டிக்டாக் டீம்.. பின்னணி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் நாள் பிரச்சாரம் செய்ய சென்ற போது அங்கு அவருக்கு பெரிய அளவில் அதிர்ச்சி காத்து இருந்துள்ளது. அங்கு அதிபர் தேர்தல் தற்போதுதான் சூடு பிடித்து இருக்கிறது.

Recommended Video

    TikTok மூலம் பிரச்சாரம்... Trump- க்கு ஷாக் கொடுத்த அமெரிக்கர்கள்

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் அதிபர் டிரம்ப் இந்த முறை நினைத்ததை விட மிக மோசமான எதிர்வினைகளை, விமர்சனங்கள் பெற்று வருகிறார். அவருக்கு எதிரான எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    முக்கியமாக கொரோனாவை சரியாக எதிர்கொள்ளாதது, ஜார்ஜ் பிளாய்டு கொலை, அது தொடர்பான போராட்டங்கள் என்று நிறைய விஷயங்கள் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. டிரம்ப் இந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதே சந்தேகம்தான் என்கிறார்கள்.

    டெஸ்டிங் அதிகரிச்சா.. கேஸ்களும் அதிகரிக்கும்.. அதான் டெஸ்டிங்கை குறைக்க சொல்லிட்டேன்.. டிரம்ப் டெஸ்டிங் அதிகரிச்சா.. கேஸ்களும் அதிகரிக்கும்.. அதான் டெஸ்டிங்கை குறைக்க சொல்லிட்டேன்.. டிரம்ப்

    பின்னணி என்ன

    பின்னணி என்ன

    இந்த நிலையில்தான் அதிபர் டிரம்ப் நேற்று காலையில் அமெரிக்காவின் Oklahomaவில் இருக்கும் துல்சா பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாக இருந்தது. இந்த பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டு இருந்தது. மிகப்பெரிய அளவில் என்றால் அங்கு இருக்கும் Oklahoma Center venue பகுதியை இதற்காக புக் செய்து இருந்தனர். இதில் 19000 பேர் வரை அமர முடியும். பல ஆயிரம் பேர் நின்று பார்க்க முடியும்.

    எத்தனை பேர் அமர முடியும்

    எத்தனை பேர் அமர முடியும்

    இதன் நான்கு பக்க கதவுகளையும் திறந்துவிட்டு, ஓபன் ஸ்டேடியம் போல மாற்றினால் இன்னும் பலர் இதில் பிரச்சாரத்தை கவனிக்க முடியும். இந்த பிரச்சாரத்திற்கு 10 லட்சம் பேர் வருவார்கள், டிரம்ப் நிகழ்த்திய மிகப்பெரிய பிரச்சாரமாக இது இருக்க போகிறது என்று கூறப்பட்டது. அதிபர் டிரம்பும் இதை மிக தீவிரமாக நம்பினார். சொல்லப்போனால் 8 லட்சம் டிக்கெட்டுகள் கூட விற்றது.

    பெரிய அதிர்ச்சி

    பெரிய அதிர்ச்சி

    8 லட்சம் பேர் முன் பேச போகிறோம் என்று நினைத்துக் கொண்டு இருந்தவருக்கு மேடைக்கு சென்றால் பெரிய அதிர்ச்சி. ஏனென்றால் அந்த இடத்தில் 10 ஆயிரத்திற்கும் குறைவான நபர்கள் மட்டுமே இருந்துள்ளனர். ஆம் மொத்தம் 6000 பேர் அங்கு வந்ததாக தீயணைப்பு துறை கணக்கு சொல்கிறது. 12000 பேர் வந்தார்கள் என்று டிரம்ப்பின் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பு குழு சொல்கிறது.

    பெரிய தோல்வி

    பெரிய தோல்வி

    இதனால் அதிபர் டிரம்பின் துல்சா பிரச்சாரம் பெரிய தோல்வி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்ன என்பதுதான் இன்னும் ஷாக்கிங் விஷயமாக உள்ளது. அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள டிக்கெட் வாங்க வேண்டும். இதன் மூலம்தான் எத்தனை பேர் வருகிறார்கள் என்று கணக்கு வைக்கப்படும். இதற்கு பணம் செலுத்த தேவையில்லை. போன் எண்ணை கொடுத்துவிட்டு, புக் செய்தால் போதும்.

    செய்தது என்ன

    செய்தது என்ன

    இந்த நிலையில் அங்கு டிரம்பிற்கு எதிராக டிக்டாக்கில் பெரிய அளவில் பிரச்சாரம் சென்று கொண்டு இருக்கிறது. அதன்படி இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து டிரம்பின் பிரச்சாரத்திற்கு டிக்கெட் வாங்க வேண்டும். ஆனால் யாரும் போக கூடாது என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக 12ம் தேதியில் இருந்து பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். எல்லோரும் டிக்கெட்டை வாங்கி குவியுங்கள், ஆனால் யாரும் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

    மொத்தமாக வாங்கி குவித்தனர்

    மொத்தமாக வாங்கி குவித்தனர்

    இதையடுத்து அமெரிக்காவை சேர்ந்த இளைஞர்கள் பலர் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டை வாங்கி குவித்து உள்ளனர். இதனால்தான் 8 லட்சம் வரை புக் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் டிக்கெட்டை புக் செய்துவிட்டு அவர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. டிரம்பை ஏமாற்ற வேண்டும், காலி இருக்கைகளை பார்த்து அவர் அதிர்ச்சி அடைய வேண்டும். அவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இப்படி செய்துள்ளனர்.

    என்ன மறுப்பு

    என்ன மறுப்பு

    ஆனால் இன்னொரு பக்கம் இதற்கு டிரம்பின் பிரச்சாரம் கமிட்டி மறுப்பு தெரிவித்துள்ளது. பொய்யாக புக் செய்யப்பட்ட டிக்கெட்டுகளை நாங்களே கேன்சல் செய்து விட்டோம். பொய்யாக எங்களுக்கு எதிராக சதி நடக்கிறது என்று தெரியும். இதற்கு நாங்கள் தயாராகத்தான் இருந்தோம். யாரும் பொய்யான விஷயங்களை நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    என்ன சூழ்நிலை

    என்ன சூழ்நிலை

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். ஆனால் இதுவரை வெளியான கருத்து கணிப்புகள் படி டிரம்ப் இந்த தேர்தலில் வெற்றிபெற பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்று கூறுகிறார்கள். வரும் நவம்பர் முதல் வாரம் நடக்கும் இந்த தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று குடியரசுத் கட்சி வேட்பாளரான டிரம்ப் முடிவு செய்துள்ளார். ஆனால் இன்னொரு பக்கம் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு கூடிக்கொண்டே செல்கிறது.

    English summary
    US Presidential elections: How TikTok boys played a major role in lower turn out in Trump's Tulsa Campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X