நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கைகோர்த்த இந்தியா, யுகே.. அமெரிக்கா போடும் செம பிளான்.. சீனாவை அசைக்க போகும் "ஹுவாவே" மோதல்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: சீனாவின் டெலிகாம் நிறுவனம் மற்றும் டெக் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் வகையில் இந்தியா மற்றும் யுகே உடன் இணைந்து செயல்பட அமெரிக்கா முடிவு எடுத்துள்ளது.

Recommended Video

    Huawei வைத்து China-வை அசைத்து பார்க்கும் உலக நாடுகள்

    சீனாவிற்கு எதிரான மோதல் நிலவி வந்த நிலையில் 50 சீனாவின் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. டிக்டாக் உள்ளிட்ட பிரபலமான செயலிகளை இந்தியா தடை விதித்தது. இந்த நிலையில் இந்தியாவை பின்பற்றி நாங்களும் சீனாவின் செயலிகளுக்கு தடை விதிப்போம் என்று அமெரிக்கா தெரிவித்து இருந்தது.

    ஏற்கனவே சீனாவின் ஹுவாவே நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதித்து இருந்தது. அதேபோல் இந்தியாவும் சீனாவின் ஹுவாவே நிறுவனத்திற்கு தனது 5ஜி சந்தையில் கலந்து கொள்வதில் இருந்து தடை விதித்து இருந்தது.

    ஈரானுடன் திடீரென கைகோர்க்கும் சீனா.. பின்னணியில் இருக்கும் திட்டம்.. இந்தியாவிற்கு எதிராக டீல்?ஈரானுடன் திடீரென கைகோர்க்கும் சீனா.. பின்னணியில் இருக்கும் திட்டம்.. இந்தியாவிற்கு எதிராக டீல்?

    மைக் பாம்பியோ

    மைக் பாம்பியோ

    இந்த நிலையில் புதிய திருப்பமாக சீனாவின் டெக் நிறுவனங்களுக்கு இந்தியா தடை விதிக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை நாங்கள் வழங்குவோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸ் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள கருத்தில், சீனாவின் செயலிகளை இந்தியா தடை செய்ததை வரவேற்கிறோம். இது நல்ல முடிவு.

    முக்கிய முடிவு

    முக்கிய முடிவு

    இந்தியர்கள் உடன் இது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம். இந்தியாவிற்கு முக்கியமான தகவல்களை இது தொடர்பாக அளித்து வருகிறோம். அவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக தகவல்களை அளித்து வருகிறோம். இத்தனை நாட்கள் சீனாவை அமேரிக்கா மட்டும் தனியாக எதிர்த்து வந்தது. ஆனால் இனி நிலைமை அப்படி இல்லை.

    நாங்கள் சொன்ன ஐடியா

    நாங்கள் சொன்ன ஐடியா

    சீனாவிற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர தொடங்கிவிட்டது. இந்தியாவில் செய்யப்பட ஹுவாவே தடை மற்றும் சீன செயலிகள் தடைக்கு பின் அமெரிக்காவின் ஆலோசனையும் இருக்கிறது. அதேபோல் யுகேவில் ஹுவாவே தடை செய்யப்பட்டது. இதற்கு அமெரிக்கா ஒரு வகையில் காரணம் ஆகும். நாங்கள் கொடுத்த முக்கிய தகவல்களை வைத்துக்கொண்டு யுகே மற்றும் இந்தியா, சீனாவின் ஹுவாவேவை தடை செய்து இருக்கிறது.

    ஹுவாவே தடையை

    ஹுவாவே தடையை

    சீனாவின் ஹுவாவே நிறுவனத்திற்கு எதிராகவும் மற்ற சீனாவின் நிறுவனங்களுக்கு எதிராகவும் இந்தியா எங்கள் பக்கம் நிற்கிறது. அதேபோல் பைவ் ஐஸ் (five eyes) எனப்படும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா , கனடா, நியூசிலாந்து, யுகே ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிராக இதே போன்ற முடிவுகளை எடுக்க உள்ளது. இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை விரைவில் அமெரிக்கா வெளியிடும் என்று மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

    பகிர்ந்து எப்படி

    பகிர்ந்து எப்படி

    சீனாவை சேர்ந்த ஹுவாவே நிறுவனம்தான் இந்த அனைத்து சிக்கலுக்கும் காரணம். சீனாவின் அரசுக்கு நெருக்கமான இந்த டெலிகாம் நிறுவனம், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தகவலை திருடியதாகவும், உளவு பார்த்ததாகவும், மக்களை விவரங்களை சீனாவிற்கு விற்றதாகவும் புகார் உள்ளது. இதனால் அமெரிக்காவில் ஹுவாவே நிறுவனத்தை அதிபர் டிரம்ப் தடை செய்தார். அதேபோல் ஹுவாவே குறித்த தகவல்களை அவர் இந்தியா, யுகே உள்ளிட்ட நாடுகளுக்கு பகிர்ந்தார்.

    இதே முடிவு

    இதே முடிவு

    இந்த நிலையில் இந்தியாவும், யுகேவும் இதே முடிவை எடுத்தது. ஹுவாவேவை இந்தியாவின் 5ஜி மார்க்கெட்டில் கலந்து கொள்ள இந்தியா தடை விதித்தது. இதற்கு பின் அமெரிக்காவின் ஆதரவு இருந்ததாக தற்போது மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்தியா, யுகே உதவியுடன் சீனாவின் டெக் நிறுவனங்களுக்கு செக் வைக்க அமெரிக்கா முடிவு எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியே வரலாம், ஹுவாவே வெறும் தொடக்கம்தான் என்று கூறுகிறார்கள்.ஹுவாவேவை தொடர்ந்து சீனாவின் மற்ற நிறுவனங்களுக்கும் இதேபோல் செக் வைக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இந்த ஹுவாவே தடை கண்டிப்பாக சீனாவை அசைத்து பார்க்கும் என்கிறார்கள்.

    English summary
    Huawei Trade War: How the USA is using India and UK on its side against China IT field.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X