நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சந்தேகம் வருகிறது.. ஏதோ தவறு நடந்துள்ளது.. உக்ரைன் விமான விபத்து.. ஈரான் மீது டிரம்ப் பகீர் புகார்!

ஈரான் அருகே உக்ரைன் விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது தனக்கு பல சந்தேகங்களை எழுப்புகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈரான் விமான விபத்து பதற வைக்கும் ஷாக்கிங் காட்சிகள். - வீடியோ

    நியூயார்க்: ஈரான் அருகே உக்ரைன் விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது தனக்கு பல சந்தேகங்களை எழுப்புகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    நேற்று முதல் நாள் ஈரானில் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் அதிகாலை விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 170 பேரும் பலியானார்கள். விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்து நடந்துள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்கிறார்கள் டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது. இந்த விமானம் உக்ரைன் அரசுக்கு சொந்தமான உக்ரைனியன் சர்வதேச ஏர்லைனர் விமானம் ஆகும்.

    ஈரான் விமான விபத்து சந்தேகம் தருகிறது.. களமிறங்கினார் ஜஸ்டின் ட்ரூடோ.. விசாரணை செய்யும் கனடா! ஈரான் விமான விபத்து சந்தேகம் தருகிறது.. களமிறங்கினார் ஜஸ்டின் ட்ரூடோ.. விசாரணை செய்யும் கனடா!

    என்ன வாய்ப்பு

    என்ன வாய்ப்பு

    இந்த நிலையில் இந்த விமான விபத்து, சமயத்தில் விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்று பலர் சந்தேகிக்கிறார்கள். முக்கியமாக அமெரிக்காவை சேர்ந்த வல்லுநர்கள் பலர் இது தொடார்பாக சந்தேகம் எழுப்பி உள்ளனர். இந்த விமான விபத்திற்கு, ஈரானில் நடந்து வரும் போருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

    ஈரான் எப்படி

    ஈரான் எப்படி

    ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருக்குமா என்று கேள்விகள் எழுப்பப்படுகிறது. தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் அதே கேள்வியை எழுப்பி இருக்கிறார். டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், எனக்கு சந்தேகம் இருக்கிறது. அந்த விமானம் பறந்த போது அங்கு சூழ்நிலை சரியில்லையா.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    அந்த நாட்டில் நடந்த பிரச்சனை காரணமாக விமானத்திற்கு தவறுதலாக ஏதாவது நடந்து இருக்கலாம். சிலர் இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதை என்னால் நம்ப முடியவில்லை.

    முடியவில்லை

    முடியவில்லை

    ஆம் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏதோ பெரிய விஷயம் இன்று நடந்து இருக்கிறது. மோசமான விஷயம் நடந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேபோல்தான் உக்ரைன் அதிபரும் தெரிவித்து இருந்தார்.

    மோசமான விபத்து

    மோசமான விபத்து

    இந்த விமான விபத்து தொடர்பாக அனைத்து விதமான வகையிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடைமர் தெரிவித்துள்ளார். விமான விபத்து குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களை புறந்தள்ள முடியாது. அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெறும் விபத்து இன்று இதை விட்டுவிட முடியாது என்று கூறியுள்ளார். இதனால் பலருக்கும் இந்த விமான விபத்தில் சந்தேகம் இருப்பது உறுதியாகி உள்ளது.

    English summary
    I have Suspicions thought about it says Trump on Ukrainian Airliner Crash in Iran day before yesterday .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X