நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லை பிரச்சனையில்.. எப்போதும் இந்தியாவுடன் உடன் நிற்பேன்.. அமெரிக்க அதிபர் வேட்பாளர் பைடன் அதிரடி

Google Oneindia Tamil News

நியூயார்க்: எல்லை பிரச்சனை மற்றும் உள்நாட்டு பிரச்சனையில் இந்தியாவுடன் உடன் இருப்பேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    எல்லை பிரச்சனை மற்றும் உள்நாட்டு பிரச்சனையில் இந்தியாவுடன் துணை நிற்பேன்.. ஜோ பைடன் அதிரடி

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. வரும் நவம்பர் முதல் வாரத்தில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.குடியரசு கட்சி காரணமாக அங்கு அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

    ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். இதனால் அதிபர் தேர்தல் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கமலா ஹாரிஸ் ரொம்ப மோசம்.. ஜோ பிடனை விட மோசம்.. டொனால்ட் ட்ரம்ப் ஆவேசம்கமலா ஹாரிஸ் ரொம்ப மோசம்.. ஜோ பிடனை விட மோசம்.. டொனால்ட் ட்ரம்ப் ஆவேசம்

    யார் உள்ளார்

    யார் உள்ளார்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தனது துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை தேர்வு செய்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கமலா தேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். இவர் தாய் தமிழ் பெண். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இந்த நிலையில் துணை அதிபர் வேட்பாளராக கமலாவை அறிவித்த பைடன் தற்போது இந்தியாவுடன் எப்போதும் உடன் இருப்பேன் என்று அறிவித்துள்ளார்.

    பைடன் பேட்டி

    பைடன் பேட்டி

    ஜோ பைடன் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் , இந்திய அமெரிக்கர்கள் அனைவருக்கும் மற்றும் அமெரிக்காவில் இந்திய பூர்வீகத்தோடு வசிக்கும் நபர்களுக்கும் என்னுடைய சுதந்திர தின வாழ்த்துக்கள்.நமக்கு ஒரு நெருக்கமான பந்தம் இருக்கிறது. நான் அமெரிக்க செனட்டர் மற்றும் துணை அதிபராக இருந்த போது இந்த பந்தம் மற்றும் உறவு நெருக்கமானதை பார்த்து இருக்கிறேன்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்தியாவும், அமெரிக்காவும் நெருக்கமான உறவுகளாக, நட்புகளாக மாறினால் உலகம் மொத்தமும் மாறும். உலக அமைதிக்கு அது வழிவகுக்கும். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் நான் இந்த கொள்கையில் உறுதியாக இருப்பேன். அதேபோல் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் எல்லை பிரச்சனையில் நான் இந்தியாவுடன் எப்போதும் உடன் நிற்பேன். இந்தியாவிற்கு ஆறுதலாக இருப்பேன், என்று ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியர்கள் வாக்கு

    இந்தியர்கள் வாக்கு

    அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர்களின் வாக்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு இருக்கும் டெக்சாஸ் மாகாணம் மிகப்பெரியது ஆகும். இங்கு வெற்றிபெற்றால் தேர்தலில் எளிதாக வென்று அதிபராகலாம். இங்கு இந்தியர்கள் அதிக பேர் இருப்பதால் இவர்களை கவர இரண்டு அதிபர் வேட்பளார்களும் தீவிரமாக முயன்று வருகிறார்கள். அதன் விளைவாகவே தற்போது பைடன் இந்தியாவுடன் உறுதுணையாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

    முன்பு என்ன

    முன்பு என்ன

    முன்னதாக காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கம் மற்றும் சிஏஏவிற்கு எதிராக பைடன் பேசி இருந்தார். இது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அவருக்கு எதிராக இந்தியர்கள் வாக்கு செல்லும் என்று கருதப்பட்டது. இதையடுத்து தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக பைடன் பேச தொடங்கி உள்ளார்.

    English summary
    I will stand with India on border issues says, Joe Biden, The US democratic candidate for Presidential election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X