நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆன்லைன் வகுப்புனாலும்.. தாலாட்டு தாலாட்டு தான்.. ஆஹா என்னா அருமையா தூங்குறான் இந்தக் குட்டிப்பையன்!

ஆன்லைன் வகுப்பின் போது சிறுவன் உறங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆன்லைன் வகுப்பின் போது 5 வயது சிறுவன் ஒருவன் அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக உலகமே தற்போது வீட்டிற்குள் இருந்து தான் இயங்கி கொண்டிருக்கிறது. காலையில் எழுந்து அலுவலகம் கிளம்பி சென்ற பலர், தற்போது வீட்டிற்குள்ளேயே மடிக்கணினி மூலம் வேலை பார்த்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல பள்ளிகள் தற்போது ஆன்லைன் மூலம் தான் வகுப்பெடுத்து வருகின்றன. எனவே பெற்றோரை போலவே குழந்தைகளும் காலை எழுந்து மடிக்கணினி முன் அமர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ப்பா.. 42 நாளில் 55% அதிகம் பெஞ்சிருக்கு.. இதுதான் பெஸ்ட் பருவமழை.. தமிழகத்தை புரட்டி எடுத்த வானிலை!ப்பா.. 42 நாளில் 55% அதிகம் பெஞ்சிருக்கு.. இதுதான் பெஸ்ட் பருவமழை.. தமிழகத்தை புரட்டி எடுத்த வானிலை!

சந்தோசம் இல்லை...

சந்தோசம் இல்லை...

இந்த ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. குறிப்பாக சிறு பிள்ளைகளுக்கு இந்த ஆன்லைன் வகுப்புகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது. சக வகுப்புத் தோழர்களுடன் விளையாடும் நேரத்தை அவர்கள் இழந்து வருகின்றனர்.

வைரல் புகைப்படம்

வைரல் புகைப்படம்

அதை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கும் புகைப்படம் ஒன்று. சம்பந்தப்பட்ட அந்த புகைப்படத்தில், ஒரு மேஜையில் மடிக்கணினியும், ஹெட்செட்டும் இருக்கின்றன. அந்த லேப்டாப்பில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிக்கிறார். அதன் அருகே உள்ள நாற்காலியில் 5 வயது சிறுவன் ஒருவன் அசந்து போய் உறங்கிக்கொண்டிருக்கிறான்.

குட்டிப்பையனின் சேட்டை

குட்டிப்பையனின் சேட்டை

இந்த புகைப்படத்தை வெளியிட்டது அவனது தாய் தான். " 40 நிமிட வீடியோ காலின் போது என்னுடைய மழலை பையன் என்ன செய்கிறான் என்பதை பாருங்கள்", எனக் குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் காரா மெக்டோவல் எனும் பெண்மணி. இதைப்பார்த்த நெட்டிசன்கள் புகைப்படத்தை வைரலாக்கிவிட்டனர்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

காராவின் புகைப்படத்தை பார்த்த பலரும் அந்த சிறுவனை நினைத்து பாவப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு எந்த அளவுக்கு சிரமத்தை தருகின்றன என்பதை இந்த புகைப்படத்தை பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே தாலாட்டு

அதே தாலாட்டு

பொதுவாகவே ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதை தாலாட்டு பாடுவதாகத் தான் குறும்பாக மாணவர்கள் குறிப்பிடுவார்கள். பல திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளில் கூட இதைப் பார்க்கலாம். ஆன்லைன் வகுப்பாக இருந்தாலும் தாலாட்டு தாலாட்டு தான் என்பதைச் சரியாக வெளிக்காட்டி இருக்கிறான் இந்த குட்டிப்பையன்.

English summary
A picture of a 5 years old boy sleeping while attending online class goes viral in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X