நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 நாட்கள்தான் இருக்கிறது.. சீக்கிரம் முடிவெடுங்கள்.. ஈரானுக்கு எதிராக இந்தியாவை நெருக்கும் டிரம்ப்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பணியும் இந்தியா!.. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறது- வீடியோ

    நியூயார்க்: ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா ஆணையிட்டு இருக்கிறது. இதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்களில் முடிகிறது.

    நாங்கள் ஈரானிடம் எண்ணெய் வாங்க போவதில்லை.. அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக தெரிகிறது. அதனால் அவர்களுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை முறிக்கிறோம். இனி ஈரானிடம் இருந்து யாரும் எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா கடந்த வருட தொடக்கத்தில் கூறியது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதுடன் இந்த உத்தரவையும் உடனடியாக பிறப்பித்தார். ஆனால் அப்போது இந்த பிரச்சனை இவ்வளவு பெரியதாக மாறும் என்று யாரும் நினைக்கவில்லை.

    2 வாரம் முன் சென்னையை நோட்டமிட்ட இலங்கை தீவிரவாதி.. உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்.. விசாரணை! 2 வாரம் முன் சென்னையை நோட்டமிட்ட இலங்கை தீவிரவாதி.. உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்.. விசாரணை!

    பெரிதானது

    பெரிதானது

    அதன்பின்தான் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி உலக நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியது.

    கால அவகாசம் என்ன

    கால அவகாசம் என்ன

    இதற்கான கால அவகாசம் கடந்த நவம்பர் மாதமே முடிந்துவிட்டது. ஆனால் இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதலாக 6 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்னும் 2 நாட்களில் மே 2ம் தேதி அமெரிக்கா கொடுத்த கால அவகாசம் முடிகிறது. அதற்குள் ஈரானுடன் இந்தியா கொண்டிருக்கும் எண்ணெய் வர்த்தகத்தை முறிக்க வேண்டும்.

    சீனா துருக்கி எப்படி

    சீனா துருக்கி எப்படி

    இதில் சீனா இன்னும் முழுமையான முடிவை எடுக்கவில்லை. சீனா தனது எண்ணெய்க்காக ஈரானை பெரிய அளவில் நம்பி இல்லை. அதனால் அமெரிக்காவின் கோரிக்கையை சீனா ஏற்றுக்கொள்ளும். அதேபோல் துருக்கியும் அமெரிக்காவின் பேச்சை கேட்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்தியாவின் நிலைதான் மோசம்.

    ஈரான் ஏன் முக்கியம்

    ஈரான் ஏன் முக்கியம்

    இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனைகளில் எப்போதும் ஈரான் இந்தியா பக்கமே நின்றுள்ளது. அதேபோல் இந்தியா அதிகம் எண்ணெய் வாங்கும் நாடுகளில் ஈரான் மூன்றாம் இடம் வகிக்கிறது. இந்த வருடம் ஈரான் இரண்டாம் இடம் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வருடா வருடம் ஈரானிடம் இந்தியா வாங்கும் எண்ணெய்யின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    கஷ்டம்

    கஷ்டம்

    அதேபோல் ஈரான் இந்தியாவிற்காக நிறைய சலுகைகளை அளித்துள்ளது. எண்ணெய் வாங்கும் போதே இந்தியா ஈரானுக்கு பணம் கொடுக்க வேண்டியது கிடையாது. வருட கணக்கில் கடன் வைத்து, பின்பு கூட இந்தியா ஈரானுக்கு பணம் கொடுக்கலாம். அவ்வளவு சலுகைகளை இந்தியா ஈரானிடம் பெற்றுள்ளது. ஆனால் இப்படி ஒரு கஷ்டமான சூழ்நிலையில் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா முறிக்க வேண்டியுள்ளது.

    மிக மோசம்

    மிக மோசம்

    அமெரிக்கா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கவில்லை. அதற்கு ஷெல் மற்றும் மெக்சிகோ நாட்டின் வளமே போதும். அதனால் அதற்கு பாதிப்பு இல்லை. ஆனால் ஈரான் இல்லாமல் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிக மிக மோசமாக உயர போகிறது. சவுதியிடம் இருந்து அதிக எண்ணெய் கிடைத்தால் மட்டுமே இந்தியா சமாளிக்க முடியும். இதனால் மே முதல் வாரத்திலேயே பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரிய சிக்கல்

    பெரிய சிக்கல்

    இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்தியா இந்த தடை குறித்து இன்னும் முழுதாக முடிவெடுக்கவில்லை. ஒருவேளை ஈரானுடன் உறவை முறித்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும். இல்லை என்றால் அமெரிக்காவின் பொருளாதார தடையால் அனைத்து பொருட்களின் விலையும் இந்தியாவில் உயரும். இரண்டுமே இந்தியாவிற்கு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.. என்ன பாதிப்பின் அளவுதான் மாறுபடுகிறது!

    English summary
    In just two days it is, Times Up for India: USA's ban on exporting Oil from Iran will come to effect on from May 2.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X