நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வேக்சின் டோஸ்களின் இடைவெளியை அதிகரிப்பது.. ஆபத்தை ஏற்படுத்தும்.. எச்சரிக்கும் "பவுச்சி"!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வேக்சின் டோஸ்களின் இடைவெளியை அதிகரிப்பது ஆபத்து ஏற்படுத்தலாம். இதனால் புதிய வகை உருமாறிய கொரோனா தாக்கலாம் என்று அமெரிக்கா அதிபர் சுகாதார ஆலோசகர் டாக்டர் ஆண்டனி பவுச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வேக்சின் டோஸ்களுக்கு இடையிலான காலஇடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவிட்ஷீல்ட் வேக்சினின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் 6-8 வாரங்கள் இடைவெளியில் போடப்பட்ட நிலையில் 12-16 வாரங்கள் இடைவெளியில் இதை போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க! இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!

அதோடு கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் 6 மாதங்களுக்கு பின்பே வேக்சின் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 அறிவுரை

அறிவுரை

இந்த நிலையில் கொரோனா வேக்சின் டோஸ்களின் இடைவெளியை அதிகரிப்பது ஆபத்து ஏற்படுத்தலாம், என்று அமெரிக்கா அதிபர் சுகாதார ஆலோசகர் டாக்டர் ஆண்டனி பவுச்சி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், பொதுவாக வேக்சின் டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிப்பது ஆபத்தை ஏற்படுத்தலாம். இதனால் புதிய வகை உருமாறிய கொரோனா தாக்கலாம்.

கொரோனா

கொரோனா

முக்கியமான எம்ஆர்என்ஏ வகை வேக்சின் டோஸ்களை அதிக இடைவெளியில் போட கூடாது. பைசர் வேக்சின் டோஸ்களை 3 வார இடைவெளியிலும் , மாடர்னா வேக்சின் டோஸ்களை 4 வார இடைவெளியிலும் போட வேண்டும். யுகேவில் அதிக இடைவெளிவிட்டு வேக்சின் போட்டார்கள். அதுவே சிக்கலாக முடிந்தது. அதே சமயம் போதிய வேக்சின் இல்லாத போது வேறு வழியில்லை.

Recommended Video

    Wuhan lab மர்மம்.. வெளியான அமெரிக்க ஆய்வாளர்களின் ரகசிய அறிக்கை
    வேக்சின்

    வேக்சின்

    டெல்டா வகை கொரோனா மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் வேகமாக பலரிடம் பரவி வருகிறது. டெல்டா வகை கொரோனா இருக்கும் நாடுகள் எல்லாமே அதிக கவனமாக இருக்க வேண்டும். இதனால் கேஸ்கள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

     வேக்சின் இல்லை

    வேக்சின் இல்லை

    முக்கியமாக வேக்சின் போதிய அளவில் போடாத நாடுகள் டெல்டா வகை கொரோனா மூலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. வேக்சின் போடாத மக்கள் இடையே டெல்டா வகை கொரோனா அதிகம் பரவும் ஆபத்துகள் உள்ளன. தற்போது யுகேவில் இதே போல்தான் டெல்டா வகை கொரோனா அதிகமாக பரவுகிறது என்று ஆண்டனி பவுச்சி எச்சரித்துள்ளார்.

    English summary
    Increasing the gap between vaccine doses may make you vulnerable to variants says Dr. Fauci the medical advisor to the United States President.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X