நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முற்றும் மோதல்.. அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிக்க இந்தியா முடிவு.. டிரம்பிற்கு பதிலடி!

இந்தியாவை வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலிருந்து அமெரிக்கா நீக்கியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்கா வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்- வீடியோ

    நியூயார்க்: இந்தியாவை வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலிருந்து அமெரிக்கா நீக்கியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக இந்தியா, அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிக்க முடிவெடுத்து உள்ளது.

    அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கப்பட உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது. அமெரிக்கா உலகில் சில முக்கிய நட்பு நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள்( Generalized System of Preferences - GSP) என்று பட்டியலில் வைத்து இருக்கிறது.

    இதில் இந்தியாவும் இருக்கிறது. இந்த பட்டியலில் இருந்துதான் இந்தியா தற்போது நீக்கப்பட உள்ளதாக செய்திகள் வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பை அதிபர் டிரம்ப் இன்னும் சில நாட்களில் வெளியிடுவார்.

     மத்தியில் பாஜக, மாநிலத்தில் மமதா ஆட்சியை அகற்ற வேண்டும்.. ராகுலுக்கு மே. வ. காங்கிரஸ் கோரிக்கை மத்தியில் பாஜக, மாநிலத்தில் மமதா ஆட்சியை அகற்ற வேண்டும்.. ராகுலுக்கு மே. வ. காங்கிரஸ் கோரிக்கை

    பெரிய நஷ்டம்

    பெரிய நஷ்டம்

    இந்தியா அமெரிக்க பொருட்கள் மீது மோசமாக வரி விதிக்கிறது என்று டிரம்ப் கோபமாக கூறி இருந்தார். இதனால் கோபம் அடைந்த டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். ஜிஎஸ்பி பட்டியலில் இருப்பதன் மூலம் இந்தியா 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை அமெரிக்காவில் வரி இல்லாமல் வர்த்தகம் செய்ய முடியும். ஆனால் தற்போது இந்தியாவிற்கு இந்த 30,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட உள்ளது.

    தவறானது என்றனர்

    தவறானது என்றனர்

    இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து இந்தியா உலக வர்த்தக அமைப்பிடம் (World Trade Organization) முறையிட முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது. ஜிஎஸ்பியில் இருந்து இந்தியாவை நீக்குவது நடைமுறைக்கு எதிரானது. இது இந்தியாவுடன் அமெரிக்கா செய்த ஒப்பந்தத்திற்கு எதிரானது. அமெரிக்கா விதிகளை மீறுகிறது என்று இந்தியா புகார் அளிக்க போகிறது.

    ஏற்ற முடிவு

    ஏற்ற முடிவு

    அதேபோல் இன்னொரு வகையில் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரியை விதிக்க போகிறது. அமெரிக்கா உணவு பொருட்கள், மாமிசங்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதிக்க முடிவு செய்துள்ளது. 74 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தியா அமெரிக்காவின் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    மோதல் உடனே

    மோதல் உடனே

    ஆனால் இந்த பிரச்சனையை சரி செய்யவும் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏப்ரல் 1ம் தேதிக்குள் இந்த பிரச்னையை சரி செய்ய முடிவெடுத்து இருக்கிறார்கள். இல்லையென்றால், இந்தியா அமெரிக்கா மீது ஏப்ரலில் இருந்து புதிய வரி கொள்கையை அமல்படுத்தும். சமயங்களில் இதற்கு இடையில் கூட இந்தியா இந்த வரிக்கொள்கையை அறிமுகப்படுத்தும். இதனால், இந்தியா - அமெரிக்கா இடையே வெளிப்படையான பொருளாதார மோதல் ஏற்பட்டு உள்ளது.

    English summary
    India decides to put retaliatory tariffs on US products worth $10.6 billion after Trumps GSP decision.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X