நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது: ஐநாவில் பிரதமர் மோடி சொன்ன நல்ல செய்தி

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, "உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் ஐநா சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் கொடுக்கலாம் என்றார்.

முழு உலகமும் அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனையை வளர்ச்சிக்கு அடிப்படையாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபையில் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றடைந்தார். கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்களுடன் சந்திப்பு, துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் சந்திப்பு என பல நிகழ்ச்சிகளி்ல் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்றார். நேற்று குவாட் அமைப்பு மாநாடு மற்றும் அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, பரஸ்பரம் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், கரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்நிலையில் வாஷிங்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு இன்று பிரதமர் மோடி வந்தடைந்தார்.

 ஒரே வார்த்தையில்.. ஐநா சபையில் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கொடுத்த சூப்பர் பதிலடி ஒரே வார்த்தையில்.. ஐநா சபையில் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கொடுத்த சூப்பர் பதிலடி

12 வயது

12 வயது

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். குறிப்பாக கொரோனா தடுப்பூசி குறித்து பேசும் போது, "உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் ஐநா சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12. வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் கொடுக்கலாம். ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசி வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்திய விஞ்ஞானிகளும் கோவிட் -19 க்கு எதிராக சொட்டுமருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பூசி, எம்ஆர்என்ஏ தடுப்பூசி ஆகியவற்றை உருவாக்கி வருகிறார்கள்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

உலகளாவிய பொருளாதாரம் மேலும் பன்முகப்படுத்தப்பட வேண்டும் என்பதை கொரோனா தொற்றுநோய் உலகிற்கு கற்பித்தது. அதனால்தான் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளின் விரிவாக்கம் மிகவும் முக்கியமானது. எங்களது 'ஆத்மநிர்பர் பாரத் அபியான்' திட்டம் இந்த உணர்வால் தான் உருவாக்கப்பட்டது

பகுத்தறிவு

பகுத்தறிவு

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், இந்திய மாணவர்கள் உருவாக்கிய 75 செயற்கைக்கோள்களை இந்தியா விண்வெளிக்கு அனுப்பப் போகிறது. இத்தகைய சூழ்நிலையில், முழு உலகமும் அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனையை வளர்ச்சிக்கு அடிப்படையாக மாற்ற வேண்டும். அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையை வலுப்படுத்தும் பொருட்டு, இந்தியா அனுபவம் சார்ந்த கற்றலை ஊக்குவிக்கிறது

பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பேச்சு


இந்தியாவை உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் மையமாக மாற்றுவதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளோம். சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. நாம் நமது வருங்கால சந்ததியினருக்குப் பொறுப்பானவர்கள், பொருளாதார வளர்ச்சி , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது." இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

English summary
PM Modi said that I would like to inform the UNGA that India has developed the world's first DNA vaccine. This can be administered to anyone above the age of 12. An mRNA vaccine is in the final stages of development. Indian scientists are also developing a nasal vaccine against COVID19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X