• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஐ.நா. கூட்டம்.. இந்தியா தலைமை.. தாலிபான்களுக்கு அழுத்தம் தரும் தீர்மானம்.. ரஷ்யா, சீனா புறக்கணிப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க கூடாது, எந்த ஒரு நாட்டுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஆப்கனிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறிய நிலையில், ஐ.நா. மூலமாக ஆப்கனுக்கு அழுத்தம் தரும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் நாடு முழுவதையும் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி தலிபான்கள் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயங்குவதற்கு காரணம் என்ன?ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயங்குவதற்கு காரணம் என்ன?

அமெரிக்கா திரும்பியது

அமெரிக்கா திரும்பியது

இதையடுத்து, பல்வேறு நாட்டு மக்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டது. பின்னர், நேற்று அமெரிக்க ராணுவத்தின் கடைசி வீரரும் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து கிளம்பி தங்கள் தாயகம் சென்றார்.

ஐ.நா.உதவி

ஐ.நா.உதவி

அமெரிக்கா வெளியேறி விட்டாலும் மக்களுக்குத் தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக செய்வோம் என அந்நாடு உறுதி அளித்தது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தன.

தீவிரவாதிகள் புகலிடம்

தீவிரவாதிகள் புகலிடம்

அந்த தீர்மானம், "ஆப்கானிஸ்தான் மண் எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்கோ அல்லது பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கோ பயன்படுத்தப்படாது, ஆப்கானியர்கள் மற்றும் நாட்டிலிருந்து அனைத்து வெளிநாட்டினரும் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் வெளியேறுவது குறித்து தலிபான்கள் அளித்த உறுதிப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தாலிபான் பற்றி வாய் திறந்த Rajnath Singh|Defense Updates With Nandhini EP03 |Oneindia Tamil
  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர்

  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர்

  15 நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தற்போது தலைமை தாங்கி வருகிறது. எனவே, இந்தியாவின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது.

  ரஷ்யா, சீனா

  ரஷ்யா, சீனா

  இதில் 13 நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. எந்த ஒரு நாடும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. ஆனால் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா இந்த ஓட்டெடுப்பை புறக்கணித்தன. எனினும் 13 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது.

  ரஷ்யா புறக்கணிப்பு ஏன்

  ரஷ்யா புறக்கணிப்பு ஏன்

  ஐநாவுக்கான ரஷ்யாவின் தூதுவர் வாசிலி நெபென்ஸியா, இந்தத் தீர்மானம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைப் பற்றி போதுமானதாக இல்லை. அமெரிக்காவால் ஆப்கனில், முடங்கிய பொருளாதார மற்றும் மனிதாபிமான விளைவுகளை பற்றி பேசவில்லை. ஆப்கானிஸ்தான் மீதான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது விலக வேண்டிய நிலை ரஷ்யாவுக்கு இதனால்தான் ஏற்பட்டது. ஏனெனில் தீர்மான வரைவை உருவாக்கியவர்கள், கொள்கை ரீதியான கவலைகளை புறக்கணித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  சீனா புறக்கணிப்பு ஏன்

  சீனா புறக்கணிப்பு ஏன்

  சீனத் தூதர் கெங் ஷுவாங் கூறுகையில், சம்பந்தப்பட்ட நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை வரைவுத் தீர்மானத்தை வழங்கினர். எனவே எங்களுக்கு போதிய கால அவகாசம் இல்லை. ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு சூழ்நிலையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த சர்வதேச சமூகம் தாலிபான்களுடன் தொடர்பில் ஈடுபடுவது அவசியம், மேலும் அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

  English summary
  United Nations Security Council has passed a resolution on today, on the situation in Afghanistan demanding that Afghanistan should not be used to threaten or attack any Nation or shelter terrorists.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X