நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஷத்தை கக்குகிறது.. பாகிஸ்தான் குறித்து ஐநா சபையில் இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

நியூயார்க்: விஷம் தேய்ந்த பொய் கதைகளை பாகிஸ்தான் தொடர்ந்து கக்கி வருகிறது என்றும், தொடர்ந்து வெறுப்பை விதைத்து வருவதாகவும் ஐநா சபையில் இந்திய தூதர் நாகராஜ் நாயுடு பதிலடி கொடுத்தார்.

பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்கும் முயற்சியில் பல்வேறு ஐ.நா. தளங்களில் தொடர்ந்து எழுப்புகிறது, ஆனால் பலமுறை எந்த ஆதரவையும் பெறத் தவறிவிட்டது.

கடந்த வாரம், 15 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்களிடமிருந்து ஆதரைவை பெறுவதற்கான முயற்சிகளில் தோல்வியுற்றது.

இருதரப்பு விஷயம்

இருதரப்பு விஷயம்

பாகிஸ்தான் தனது மிகக் சிறந்த கூட்டாளி நாடான சீனாவுடன் இணைந்து ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் பிரச்சினையை எழுப்பியது. இதற்கு மற்ற நாடுகள் ஆதரவு தரவில்லை. காஷ்மீர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விஷயம் என்று மற்ற நாடுகளின் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இருந்தது. இதனால் தீர்மானம் தோற்றுப்போனது.

குழப்பத்தை ஏற்படுத்துகிறது

குழப்பத்தை ஏற்படுத்துகிறது

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு அவையின் இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி கே.நாகராஜ் நாயுடு, புதன்கிழமை 'ஐநா அமைப்பின் பணிகள் குறித்த பொதுச்செயலாளரின் அறிக்கை' குறித்த பொதுச் சபையின் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், "பாகிஸ்தான் ஆவேசம் மற்றும் பழிவாங்கும் போக்கை கை விடுவதற்கு பதிலாகவும், நட்புறவை மீட்டெடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு பதிலாகவும் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. சர்வதேச சமூகத்தை உண்மையில் இருந்து விலக்கி குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது.

வெறுப்பு பேச்சு

வெறுப்பு பேச்சு

மீனை தண்ணீருக்கு எடுத்துச் செல்வதைப் போல, பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் வெறுக்கத்தக்க பேச்சை பேசுகிறது. பாகிஸ்தான் ஒவ்வொரு முறை பேசும் போதும் விஷம் தேய்ந்த கதைகளை சொல்கிறது. அதாவது, நடக்காத ஒன்றை நடந்ததாக மோசமாக பேசுகிறது.

அழித்தது பாகிஸ்தான்

அழித்தது பாகிஸ்தான்

சிறுபான்மையினரை முற்றிலுமாக அழித்த ஒரு நாடு சிறுபான்மையினரைப் பாதுகாப்பது பற்றிப் பேசுவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. பாகிஸ்தானின் தவறான பாசாங்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதனால் ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்வதிலிருந்து திசைதிருப்புகிறது. பாகிஸ்தானை போல் பொய்யை பேசும் நாடு இங்கு இல்லை என்பதை நாம் காட்ட வேண்டும்" என்றார்.

இந்த இடம் அல்ல

இந்த இடம் அல்ல

ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் ஆலோசகர் சாத் அகமது வார்ரைச், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பின்னரே இந்திய தூதர் நாகராஜ் நாயுடு, வலுவான பதிலடி கொடுத்துள்ளார்,. பாகிஸ்தான் சார்பாக ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற சீனாவின் சமீபத்திய முயற்சி கடந்த வாரம் தோல்வியடைந்தது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினை குறித்து விவாதிப்பதற்கான இடம் இது அல்ல என்ற கருத்தை பெரும்பான்மையான உறுப்பினர்கள் வெளிப்படுத்தியால் சீனாவும் பாகிஸ்தானும் ஏமாற்றம் அடைந்தன.

English summary
India has slammed Pakistan for "spewing venom and false narratives" of monumental proportions in the United Nations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X