நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐநா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினரானது இந்தியா.. 188 நாடுகள் ஆதரவு!

ஐநா மனித உரிமைகள் குழு தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஐநா மனித உரிமைகள் குழு தேர்தலில் இந்தியா 188 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.

ஐநா மனித உரிமை அவைக்கென சில நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகளை பெறுவதன் மூலம் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வாக முடியும். இதில் 18 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

India wins in UN human rights council

ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கென ஐநா சபையில் மனித உரிமை அவையில் ஐந்து இடங்கள் உண்டு. இதற்காக இதர நாடுகள் உறுப்பினர்களிடையே நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா மற்ற நாடுகளை விட அதிக ஆதரவை பெற்றுள்ளது.

188 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இதைத்தொடர்ந்து இந்தியா வரும் 2019 ஜனவரி முதல் 3 ஆண்டுகளுக்கு அவையில் உறுப்பினராக இருக்கும்.

[இந்திரஜித், அபிமன்யு போன்றவர் பரிதி இளம்வழுதி என்பார் கருணாநிதி.. ஸ்டாலின் புகழாரம்]

இந்தியாவுடன் சேர்த்து பசிபிக் பிராந்தியத்திற்கென பக்ரைன், வங்காளதேசம், பிலிப்பைன்ஸ் மற்றும் பிஜி நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளை விட கூடுதல் ஓட்டுக்கள் பெற்று ஐநா மனித உரிமைகள் குழு தேர்தலில் வெற்றி பெற்று, உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது.

English summary
India wins in UN human rights council. 188 countries has voted for India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X