நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஃபுல் போதை.. மலையில் ஏறி செல்பி.. விழுந்து உயிரை விட்ட இந்திய தம்பதி

உயிரிழந்த தம்பதி மதுபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    செல்பி எடுக்கப்போய் உயிரை விட்ட இந்திய தம்பதி- அதிர்ச்சி தகவல்கள்- வீடியோ

    நியூயார்க்: அமெரிக்காவின் மலை உச்சியில் ஏறி செல்பி எடுக்க போய் தவறி விழுந்து உயிரை விட்ட இந்திய தம்பதி இருவருமே ஃபுல் போதையில் இருந்தனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    கேரள மாநிலம், செங்கானுரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் விஷ்ணு விஸ்வநாத். இவரது மனைவி மீனாட்சி மூர்த்தி. விஷ்ணுக்கு 29 வயதாகிறது.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிஸ்கோ இந்தியா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கணவனுக்கும் மனைவிக்கும் மலையேற்ற பயிற்சியில் ரொம்ப ஆர்வம்.

    மலை உச்சி

    மலை உச்சி

    அதனால் கடந்த அக்டோபர் 25ம் தேதி அமெரிக்காவின் யோஷ்மைட் என்ற தேசிய பூங்காவுக்கு ரெண்டு பேரும் சுற்றி பார்க்க போனார்கள். அங்குள்ள 800 அடி உயர மலை உச்சியிலும் சர்வசாதாரணமாக ஏறினார்கள். உச்சியில் போய் நின்றுகொண்டு, இருவரும் அதனை செல்பியாக எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்ட லைக்ஸ்குகளை அள்ள நினைத்தார்கள்.

    இந்திய தம்பதி

    இந்திய தம்பதி

    ஆனால் 800 அடி உயர பாறையில் இருந்து இருவருமே எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்து விட்டனர். இளம் தம்பதி, அதுவும் இந்திய தம்பதி இப்படி அநியாயமாக இறந்துபோனதை நினைத்து நாடே அதிர்ச்சியடைந்தது.

    மதுபோதை

    மதுபோதை

    பிறகு சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் ரிப்போர்ட் சில தினங்களுக்கு முன்புதான் வந்துள்ளது. அதில், இருவருமே தவறி விழும் முன்பு, அதாவது விபத்துக்கு முன்பாக மதுபோதையில் இருந்திருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

    ஆல்கஹால்

    ஆல்கஹால்

    இது சம்பந்தமாக பிரேத பரிசோதனை செய்த அதிகாரிகள் கூறுகையில், இந்த தம்பதியின் பிரேத பரிசோதனையில் ஆல்கஹால் இருக்கிறது, ஆனால் விபத்து நடந்து ரொம்ப நாளாகிவிட்டதால், உடல்கள் அழுகி விட்டன. அதனால் ரெண்டு பேரும் எவ்வளவு மது அருந்தினார்கள் என தெரியவில்லை" என்றனர்.

    English summary
    Indian Couple Who Plunged 800 Ft to Death While Taking Selfie Was Drunk, Says Report
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X